7 ஆண்டாக நடந்த தரமான சம்பவம்.. வரலாற்று உச்சம்.. இனி எப்படியிருக்கலாம்?

இந்தியா சந்தையானது கடந்த 2022ம் ஆண்டில் ஒருவழியாக ஏற்றத்தில் முடிவடைந்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இந்த ஆண்டும் ஏற்றத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது கடைசியாக கடந்த 2015ம் காலண்டர் ஆண்டில் தான் சிவப்பு நிறத்தில் முடிவடைந்தது.

அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் இந்திய பங்கு சந்தையானது ஏற்றத்தில் இருந்து வருகின்றது. இது 2002 முதல் 2007 வரை கடந்த சாதனை கால அளவை விஞ்சி, இந்த ஆண்டும் ஏற்றத்தில் இருந்து வருகின்றது.

ஒற்றை இலக்கில் வளர்ச்சி

ஒற்றை இலக்கில் வளர்ச்சி

நடப்பு காலண்டர் ஆண்டில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் புதிய வரலாற்று உச்சத்தினை எட்டியுள்ளது. எனினும் ஒற்றை இலக்கத்திலேயே வளர்ச்சி கண்டுள்ளது. முடிவில் இந்திய சந்தையானது வளர்ச்சி கண்டாலும், முன்னதாக அவ்வப்போது பல திருத்தங்கள் இருந்தன.

7 ஆண்டுகளில் எவ்வளவு உச்சம்?

7 ஆண்டுகளில் எவ்வளவு உச்சம்?

2022ம் காலண்டர் ஆண்டில் சென்செக்ஸ் 5.78% ஏற்றம் கண்டது. இதே நிஃப்டி 4.33% ஏற்றம் கண்டிருந்தது. இதே சென்செக்ஸ் 2016ம் ஆண்டில் இருந்து, 34,723.20 புள்ளிகள் அல்லது 133% ஏற்றம் கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் நிஃப்டி 128% அல்லது 10,159 புள்ளிகளாக ஏற்றம் கண்டுள்ளது.

எந்த ஆண்டு எவ்வளவு ஏற்றம்?

எந்த ஆண்டு எவ்வளவு ஏற்றம்?

2016ம் ஆண்டில் சென்செக்ஸ் 1.95%மும், நிஃப்டி 3.01% ஏற்றம் கண்டும் காணப்பட்டது.

2017ல் சென்செக்ஸ் 27.91% ஏற்றம் கண்டும், நிஃப்டி 28.64% ஏற்றம் கண்டும் காணப்படுகின்றது.

2018ல் சென்செக்ஸ் 5.91% ஏற்றம் கண்டும், இதே நிஃப்டி 3.16% ஏற்றம் கண்டுள்ளது.

2019ல் சென்செக்ஸ் 14.38% ஏற்றம் கண்டும், நிஃப்டி 12.02% ஏற்றத்திலும் காணப்பட்டது.

2020ல் சென்செக்ஸ் 15.75% ஏற்றம் கண்டும், நிஃப்டி 24.12% ஏற்றத்திலும் காணப்பட்டது.

2021ல் சென்செக்ஸ் 20.45% ஏற்றம் கண்டும், நிஃப்டி 24.12% ஏற்றத்திலும் காணப்பட்டது.

2022ல் சென்செக்ஸ் 2019க்கு பின்பு மீண்டும் இரட்டை இலக்கில் ஏற்றத்தினை கண்டு, 5.78% ஏற்றத்திலும், இதே போல நிஃப்டியும் 4.33% ஏற்றத்திலும் காணப்படுகின்றது.

சென்செக்ஸ் & நிஃப்டி

சென்செக்ஸ் & நிஃப்டி

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டுமே 2002 - 2007-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில், 523% மற்றும் 480% ஏற்றம் கண்டுள்ளது.

2016ம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு காலண்டர் ஆண்டிலும் இரண்டு குறியீடுகளுமே ஏற்றத்தில் காணப்பட்டாலும், கடந்த சில ஆண்டுகளாகவே இரட்டை இலக்கில் ஏற்றம் கண்டு காணப்பட்டது.

நடப்பு ஆண்டு நிலவரம்?

நடப்பு ஆண்டு நிலவரம்?

நடப்பு ஆண்டில் பணவீக்கத்தின் மத்தியில் சர்வதேச பொருளாதாரம் என்பது மந்த நிலையில் காணப்படுகின்றது. இதற்கிடையில் மற்ற சந்தைகளை காட்டிலும், இந்திய சந்தையானது நன்றாகவே செயல்பட்டது. சவாலான காலகட்டத்தில் இருந்தபோதிலும், இந்திய சந்தையானது பெரிதும் ஏமாற்றம் காணவில்லை என்று ஹெச் டி எஃப் சி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரஜ் ரெல்லி கூறினார்.

அன்னிய முதலீடுகள்

அன்னிய முதலீடுகள்

இதன் பொருள் வளர்ந்து வரும் சந்தைகளை நோக்கி அன்னிய முதலீடுகளை ஈர்த்து வருகின்றது. இது ரூபாய் மீதான அழுத்தம், நிதி பற்றாக்குறை என்பது இந்திய சந்தையில் அழுத்தம் இருந்தாலும், பல சாதகமான காரணிகளும் சந்தைக்கு சாதகமாக பார்க்கப்பட்டது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் அன்னிய முதலீட்டாளர்கள் பெரியளவில் இந்திய சந்தையில் இருந்து வெளியேறியுள்ளனர். எனினும் 2023ல் மீண்டும் இந்திய சந்தையானது ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்றம் காணலாம்

ஏற்றம் காணலாம்

நடப்பு ஆண்டில் இந்திய அரசு உள்கட்டமைப்பு, ரயில்வே, நெடுசாலை துறை மற்றும் பாதுகாப்பு துறை என பல துறைகளுக்கு நிதி ஒதுக்கீடுகளை அதிகளவில் செய்யலாம். இது தவிர பி எல் ஐ மற்றும் மேக் இன் இந்தியா உள்ளிட்ட சில ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மூலம் உற்பத்தி பெருகலாம். இது இந்த துறை சார்ந்த நிறுவனங்களும் ஊக்குவிப்பாக அமையலாம். இது இந்திய பங்கு சந்தைகளுக்கு ஊக்குவிப்பாக அமையலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+