கடந்த இரண்டு நாட்களாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் உயர்வான நிலையில் முடிந்து, இன்றைய வர்த்தகமும் நிலையான வர்த்தக உயர்வுடன் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடு புதிய உச்சத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.
அன்னிய முதலீடு
மத்திய அரசு பட்ஜெட் அறிக்கையில் அன்னிய முதலீடுகளான அளவுகளை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் இந்திய பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீட்டைச் செய்து வருகின்றனர்.
புதிய உச்சம்
இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 350 புள்ளிகள் வரையில் உயர்ந்து புதிய உச்ச அளவான 35,507 புள்ளிகளை அடைந்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
மேலும் இன்றைய வர்த்தக முடிவில் அதாவது ஐரோப்பிய சந்தையின் துவக்கம் முதல் தொடர்ந்து சரிந்தது சென்செக்ஸ் குறியீடு 178.47 புள்ளிகள் உயர்வுடனும், நிஃப்டி குறியீடு 28.45 புள்ளிகள் உயர்ந்து 10,817.00 புள்ளிகள் அளவிலும் உயர்ந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்று ஐடிசி, எச்டிஎப்சி வங்கி, எச்டிஎப்சி, மஹிந்திரா, கோட்டாக் வங்கி ஆகியவை அதிகளவிலான உயர்வைச் சந்தித்தது.


Click it and Unblock the Notifications