இந்திய பங்குச்சந்தையில் முக்கிய பங்கு குறியீடுகளான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் ஆகியவை வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது.
வங்கி மற்றும் நிதி நிறுவனப் பங்குகளின் விலை உயர்வே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அமெரிக்காவில் வலுவான பொருளாதார தரவு வெளியான பின்னரும் கூட, வட்டி விகிதங்கள் விரைவில் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு குறைந்த போதிலும், பங்குச்சந்தை சாதனை படைத்துள்ளதற்கு டாலர் டிமாண்ட் அதிகரிப்பு முக்கிய காரணம்.

இன்றைய (மே 24) வர்த்தகத்தில், நிஃப்டி 50 குறியீடு புதிய உயர்வான 23,004.05 புள்ளிகளைத் தொட்டது. உச்சத்தை தொட்ட சிறிது நேரத்தில் சரிந்து தற்போது 22,979.15 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.
அதேபோல், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடும் 75,582 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. பின்னர் சிறிது சரிந்து தற்போது 75,466.25 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் வியாழக்கிழமை வெளியான தரவுகள், அந்நாட்டில் வேலையின்மை காரணமாக அரசின் நிவாரணம் பெறும் கோரிக்கை குறைந்துள்ளதையும், வணிக நடவடிக்கைகள் மே மாதத்தில் பொருளாதார வல்லுநர்களின் கணிப்பை விட வேகமாக விரிவடைந்துள்ளதையும் காட்டுகின்றன. இந்த தரவுகள் வட்டி விகிதங்கள் விரைவில் குறைக்கப்பட வாய்ப்புகள் குறைவதைச் சுட்டிக்காட்டினாலும், இந்திய பங்குச்சந்தை அதை பொருட்படுத்தாமல் உயர்ந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் இந்திய ரிசர்வ் வங்கி-யின் நிர்வாகக் குழு புதன்கிழமை வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு தான். 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசுக்கு ரூ.2.11 லட்சம் கோடி அளவிலான டிவிடெண்ட் தொகையை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்திய வரலாற்றில் மிகவும் அதிகப்படியான தொகை என்பது மட்டும் அல்லாமல் 1 லட்சம் கோடி ரூபாய் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இடத்தில் 2.11 லட்சம் கோடி கொடுக்கும் அளவுக்கு நாட்டின் பொருளாதாரம் இருப்பதாலேயே இந்த தொகையைப் பகிர்ந்துள்ளது.
ஆர்பிஐ அளித்துள்ள டிவிடென்ட் தொகையை மூலம் மத்திய அரசின் நிதி இலக்குகளை அடைவது மிகவும் எளிதாகிவிடும். இதனால் அரசு சாலைகள், ரயில்வே மற்றும் பாதுகாப்பு போன்றவற்றுக்கு ஒதுக்கீடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்கட்டமைப்பு (capex) செலவுகளைத் தொடர்ந்து அதிகரிக்க முடியும்.
இந்த உபரி நிதியால் மத்தியில் யார் ஆட்சி அமைத்தாலும் capex துறையில் அதிகப்படியான முதலீட்டைச் செய்ய முடியும். இதனாலேயே பங்குச்சந்தை தடாலடியாக உயர்ந்துள்ளது.
சென்செக்ஸ் பங்குகளைப் பொறுத்தவரை இன்றைய வர்த்தகத்தில், டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், Larsen & Toubro (L&T), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), பார்தி ஏர்டெல் ஆகிய பங்குகளின் விலைகள் உயர்வில் தொடங்க, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (M&M), டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), டெக் மஹிந்திரா, மாருதி சுசூகி, இன்ஃபோசிஸ் ஆகிய பங்குகளின் விலைகள் சரிவுடன் தொடங்கின.
இதற்கிடையே விமான போக்குவரத்து சேவை நிறுவனமான இண்டிகோவின் நான்காம் காலாண்டு லாபம் இரட்டிப்பாகி கணிப்புகளைக் கடந்துள்ள நிலையில், இந்நிறுவனத்தின் பங்குகள் 3% உயர்ந்துள்ளன. மேலும், இந்த ஆண்டு சில உள்நாட்டு விமானங்களில் பிசினஸ் கிளாஸ் சேவையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications