இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் இன்று காலை வர்த்தகத்திலேயே புதிய உச்சத்துடன் தொடங்கியுள்ளது. உலகளாவிய பங்குச்சந்தையின் உயர்வு மற்றும் அமெரிக்கப் பணவீக்க அறிக்கை சாதகமாக இருந்த காரணத்தால், அமெரிக்காவில் இந்த வருடம் வட்டி விகித குறைப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாக இந்திய சந்தை மட்டும் அல்லாமல் ஆசியச் சந்தையும் உயர்வுடன் காணப்படுகிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டியைக் குறைத்தால் பத்திர சந்தையில் முடங்கியுள்ள பல பில்லியன் டாலர் பணம் பங்குச்சந்தைக்கு வரும், இதன் வாயிலாகவே இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு உயர்ந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 368 புள்ளிகள் அதாவது 0.48% உயர்ந்து 76,974 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 50 குறியீடு 111 புள்ளிகள் அதாவது 0.48% உயர்ந்து காலை 9:19 மணியளவில் 23,434 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 77145.46 புள்ளிகளையும், நிஃப்டி 23,481.05 புள்ளிகளையும் எட்டி புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டு உள்ளது.
அமெரிக்காவில் வெளியான பணவீக்க அறிக்கையில், மே மாதம் நுகர்வோர் விலை பணவீக்கம் மாற்றமின்றி இருந்தன. அதே சமயம், கோர் பணவீக்கம் மூன்று வருடங்களுக்கும் அதிகமான மந்த வளர்ச்சியைக் காட்டியுள்ளது.
இதன் மூலம் அமெரிக்காவில் செப்டம்பர் மாதம் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது என்ற எதிர்பார்ப்பை வலுப்படுத்தியுள்ளது. CME குழுமத்தின் ஃபெட்வாட்ச் கருவி-யின் படி செவ்வாய்க்கிழமை 46.8% ஆக இருந்த வட்டி விகிதம் குறைப்பிற்கான வாய்ப்பு அளவுகள் தற்போது 56.7% வாய்ப்பு இருப்பதாகக் காட்டுகிறது.
ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல், பணவீக்கம் குறைவதை ஒப்புக்கொண்டாலும், பணவீக்கம் இன்னும் அதிகமான அளவில் தான் உள்ளது என்றும் வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்புகள் தள்ளிப்போயுள்ளன என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்தியாவில் மே மாதம் சில்லறை பணவீக்கம் 12 மாதங்களுக்குக் குறைவான அளவான 4.75% ஆகக் குறைந்துள்ளது. எரிபொருள் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியே இதற்குக் காரணம். இருப்பினும், உணவுப் பொருட்களின் பணவீக்கம் வருடாந்திர அடிப்படையில் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இந்திய பணவீக்க தரவுகளின் எதிரொலிகள் இந்திய பங்குச்சந்தையில் எதிரொலித்துள்ளது. FMCG மற்றும் மீடியா துறை குறியீடுகளைத் தவிர, அனைத்து துறைகளின் குறியீடும் உயர்வில் இன்று திறந்தது.
நிஃப்டி ஐடி குறியீடு கிட்டத்தட்ட 1% உயர்ந்துள்ளது. இத்துறையில் LTIMindtree, Tech Mahindra மற்றும் Wipro ஆகிய நிறுவனங்கள் அதிகளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதோடு நிஃப்டி பைனான்சியல், ஆட்டோ மற்றும் ரியல் எஸ்டேட் குறியீடுகள் 0.4% முதல் 1.25% வரை உயர்ந்துள்ளன. மேலும் மிட் கேப் 100 குறியீடு 0.7% உயர்ந்துள்ளது, நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications