இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளே களைகட்டியது, ஆசிய பங்குச்சந்தைகளின் ஏற்றத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் பங்குகள் குறிப்பாக Blue-chip பங்குகள் புதிய உச்சத்தைத் தொட்டன. நிதித்துறை மற்றும் உலோக நிறுவனப் பங்குகளின் விலை உயர்வு இந்த ஏற்றத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது.
இந்தியாவில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் பொது தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள வேளையில், உள்நாட்டு முதலீட்டாளர்களும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தங்களுடைய முதலீட்டை பாதுகாக்கும் நோக்குடன் அதேநேரத்தில் பங்குச்சந்தையில் ஏற்படும் வளர்ச்சியை இழக்க கூடாது என்ற ஒற்றை இலக்குடன் ப்ளூ சிப் பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். இதன் எதிரொலியாகவே இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு புதிய உச்சத்தை தொட்டு உள்ளது.

மும்பை பங்குச்சந்தை (BSE) சென்செக்ஸ் காலை வர்த்தகத்தில் 75949.3 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. தற்போது 491.45 புள்ளிகள் (0.65%) உயர்ந்து 75,900.71 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி 50, 23,075.65 என்ற புதிய உச்சத்தைத் தொட்ட பிறகு, தற்போது 100 புள்ளிகள் (0.43%) உயர்ந்து 23,056.60 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் உள்ள டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவற்றின் பங்குகள் உயர்வில் திறந்தது மட்டும் அல்லாமல் 1 சதவீதம் அளவில் உயர்ந்துள்ளது. விப்ரோ, மாருதி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ரிலையன்ஸ், சன் பார்மா, ஆசியன் பெயின்ட்ஸ் மற்றும் பவர் கிரிட் ஆகியவற்றின் பங்குகள் சரிவில் உள்ளன.
இதற்கிடையே, பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீட்டில் ஜூன் 24ம் தேதி முதல் விப்ரோ பங்குகளை நீக்கி, அதற்கு பதிலாக அதானி போர்ட்ஸ் பங்குகளை சென்செக்ஸ் என்னும் 30 பங்குகளை கொண்ட குறியீட்டில் சேர்க்க உள்ளது. இதன் காரணமாக, அதானி போர்ட்ஸ் பங்குகள் காலை வர்த்தகத்தில் 3% உயர்ந்துள்ளன.
மருந்து நிறுவனமான டிவிஸ் லேபரட்டரீஸ், மார்ச் காலாண்டில் கிட்டத்தட்ட 68% லாபம் ஈட்டியதாக அறிவித்த பிறகு, அதன் பங்குகள் 5% க்கும் மேல் உயர்ந்ததன் மூலம் பிற பார்மா நிறுவனங்கள் கணிசமாக சரிந்தது.
மேலும் துறை வாரியாக பார்க்கும்போது, நிஃப்டி ரியால்டி துறை குறியீடு 1.5% உயர்ந்து முன்னிலை வகித்தன. இதன் மூலம் ரியல் எஸ்டேட் துறையில் இருக்கும் ஷோபா, லோதா மற்றும் கோத்ரேஜ் ப்ராபர்ட்டீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் உயர்ந்தன.
அதேபோல், நிஃப்டி வங்கி, நிதி சேவைகள், FMCG, உலோகம், மருந்து மற்றும் சுகாதார துறை பங்குகளும் உயர்ந்தன. இதை தொடர்ந்து நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 0.6% உயர்ந்தது, நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 0.9% உயர்ந்தது.
ஆசிய பங்குச்சந்தைகள்: ஆசிய பங்குச்சந்தைகள் இன்று லேசான உயர்வை கண்டன. இந்த வாரத்தின் இறுதியில் முக்கிய அமெரிக்க பணவீக்க அறிக்கை வெளியாக உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், அது இன்னும் சில மாதங்கள் கழித்தே நடக்கும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் vs. உள்நாட்டு முதலீட்டாளர்கள்: வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) வெள்ளிக்கிழமை ரூ.945 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். அதே சமயம், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (DIIs) ரூ.2,320 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
கச்சா எண்ணெய்: திங்கட்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை நிலையானதாக இருந்தது. OPEC+ நாடுகளின் கூட்டம் ஜூன் 2ம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், உற்பத்திக் குறைக்கும் முடிவுகளை இந்த ஆண்டின் இறுதி வரை நீடிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரெண்ட் கச்சா எண்ணெய்-யின் ஆகஸ்ட் மாத பியூச்சர் ஒப்பந்தம் ஒரு பேரல் 27 சென்ட் உயர்ந்து 82.11 டாலராக உள்ளது. அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் (ஜூலை ஒப்பந்தம்) ஒரு பேரல் 30 சென்ட் உயர்ந்து 78.02 டாலராக உள்ளது.
ரூபாய் மதிப்பு உயர்வு: இன்று காலை வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 4 காசு உயர்ந்து ரூ.83.06 ஆக உள்ளது. அமெரிக்க டாலர் குறியீடு 0.02% சரிந்து 104.7 என்ற அளவில் உள்ளது. இதுவும் பங்குச்சந்தை முதலீட்டில் குறைய முக்கிய காரணமாகும்.
More From GoodReturns

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications