மும்பை பங்குச்சந்தை இன்று வரலாற்று உச்சத்தை தொட்டு முதலீட்டாளர்களை குஷிப்படுத்தியுள்ளது, காலை வர்த்தகம் துவங்கும் போது மந்தமாகவும், சரிவுடனும் துவங்கிய வர்த்தகம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Demerger முடிந்த பின்பு தடாலடியாக உயர துவங்கியது.
இன்று சர்வதேச சந்தையில் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்துவதை நிறுத்துவதற்கான அறிவிப்புகளை எதிர்பார்த்திருந்த பலருக்கும் சீனாவின் பொருளாதார தடுமாற்றம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நிலையில் இந்திய பங்குச்சந்தையில் காலை வர்த்தகம் கைகொடுக்காத நிலையில் முதலீட்டாளர்கள் மத்தியில் சோகம் நிலவியது, ஆனால் ரிலையன்ஸ் டிமெர்ஜர்-க்கு பின்பு முதலீடுகள் குவிய துவங்தியது.

வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 474.46 புள்ளிகள் உயர்வுடன் 67,571.90 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ல் குறியீடு 67,619.16 புள்ளிகள் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டு உள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஐடிசி, கோட்டாக் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி ஆகியவை 2 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வை பதிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து மாருதி சுசூகி, பார்த் ஏர்டெல், எஸ்பிஐ, சன் பார்மா, ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், JSW ஸ்டீல் ஆகியவை 1 சதவீத உயர்வுடன் உள்ளது.
மறுமுனையில் விப்ரோ, டிசிஎஸ், டைட்டன், எல் அண்ட் டி, பஜாஜ் பின்சர்வ், ஹெச்சிஎல் டெக், அல்ட்ரா டெக் சிமெண்ட், இன்போசிஸ் ஆகியவை சரிவுடன் முடிவடைந்துள்ளது. இன்போசிஸ் இன்று ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது. நிஃப்டி குறியீடு 146 புள்ளிகள் உயர்ந்து 19,979.15 புள்ளிகளை தாண்டி முடிந்துள்ளது.
இன்று காலை நடந்த சிறப்பு ஒரு மணிநேர வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2580 ரூபாய் விலையில் முடிந்த நிலையில், நேற்றைய என்எஸ்ஈ சந்தையில் 2841.85 ரூபாய்க்கு முடிந்த நிலையில், இவ்விரண்டையும் கழித்த பின்பு ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் 261.85 ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டு உள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் பங்குகள் 1.19 சதவீதம் உயர்ந்து 2,619.80 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications