240 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ் குறியீடு..!
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் சிறப்பான உற்பத்தி அளவு, ஜிஎஸ்டி அமைப்பு இன்று நடத்தும் முக்கிய கூட்டத்தின் எதிர்பார்ப்புகள் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டை 240 புள்ளிகள் வரையில் உயர வழி செய்துள்ளது.
இன்று நடக்கும் முக்கிய ஜிஎஸ்டி கூட்டத்தின் எதிர்பார்ப்புகள்..

கடந்த 5 வர்த்தக நாட்களில் 4 நாட்கள் லாபத்தில் முடிந்த மும்பை பங்குச்சந்தை, இன்றும் 240 புள்ளிகள் உயர்ந்து லாபத்தில் முடிந்துள்ளது. இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதல் தொடர்ந்து உயர்வுடனே இருந்த மும்பை பங்குச்சந்தை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 222.19 புள்ளிகள் உயர்ந்து 31,814.22 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 91.00 புள்ளிகள் உயர்ந்து 9,979.70 புள்ளிகளை அடைந்து இந்த வாரத்தின் வர்த்தகம் முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications