வியாழக்கிழமை வர்த்தகம் துவக்கத்தில் இருந்தே மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டு அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு 10,500 புள்ளிகளை அடைந்துள்ளது.
இன்று ஆசிய சந்தையில் ஆஸ்திரேலியா, சீனா, ஹாங்காங், ஜப்பான், தைவான் நாடுகளின் வர்த்தகச் சந்தை உயர்வாக இருந்த நிலையில், ஐரோப்பிய சந்தையின் ஸ்திரமான முதலீடு இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டை நிலையான உயர்வில் நிலைநிறுத்தியது.

இதன் மூலம் இன்றைய வர்த்தகச் சந்தையும் முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 184.23 புள்ளிகள் உயர்ந்து 33,977.61 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு 62.10 புள்ளிகள் உயர்ந்து 10,505.30 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்று டாடா ஸ்டீல் நிறுவனம் இன்று அதிகமாக 4.15 சதவீதம் வரையில் வளர்ச்சியை அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து டாக்டர் ரெடடி, ஏசியன் பெயின்ட்ஸ், எல் அண்ட் டி, சன் பார்மா, ஓஎன்ஜிசி, கோல் இந்தியா ஆகிய நிறுவனங்கள் 2 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications