மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று மிட்கேப் பங்குகளின் உயர்வால், சென்செக்ஸ் குறியீடு உயர்வுடன் முடிவடைந்தது.
புதன்கிழமை வர்த்தக சரிவுடன் துவங்கினாலும் பொதுத்துறை மற்றும் எரிசக்தி நிறுவனங்களின் மீதான அதிகப்படியான முதலீடு பெற்றது. இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் மிட்கேப் பங்குகள் கணிசமாக உயர்ந்தது.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 52.42 புள்ளிகள் உயர்ந்து 31,155.91 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 11.25 புள்ளிகள் உயர்ந்து 9,618.15 புள்ளிகளை அடைந்துள்ளது.
எஸ் அண்ட் பி குறியீட்டின் இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ், டாக்டர் ரெட்டி, எல் அண்ட் டி, ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதம் வரை உயர்ந்து காணப்பட்டது.
அதேபோல் சிப்லா, ஐடிசி, எச்டிஎப்சி, விப்ரோ, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications