இந்த வாரம் இந்திய பங்கு சந்தை எப்படியிருக்கும்.. கவனிக்கவேண்டிய முக்கிய காரணிகள்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரும் வாரத்தில் சந்தையில் மிகப்பெரிய மற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பல முக்கிய டேட்டாக்கள் வெளியாகவுள்ளன. இந்திய நிறுவனங்கள் பலவும் தங்களது காலாண்டு முடிவுகளை வெளியிடவுள்ளன.

 

தொடர்ந்து வங்கிகள் பற்பல ஆஃபர்களை வாரி வழங்கி வரும் நிலையில், கடன் வளர்ச்சியும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிக் கடன் வளர்ச்சி மற்றும் டெபாசிட் வளர்ச்சியானது அக்டோபர் 21 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ள தரவுகளை உன்னிப்பாக கவனிப்பார்கள்.

இன்ஃபோசிஸ் அறிவிப்பால் கடுப்பான பிரெஷ்ஷர்கள்.. வேலை கிடைத்தும் பயனில்லையே.. ! இன்ஃபோசிஸ் அறிவிப்பால் கடுப்பான பிரெஷ்ஷர்கள்.. வேலை கிடைத்தும் பயனில்லையே.. !

டெபாசிட்களின் மதிப்பு

டெபாசிட்களின் மதிப்பு

செப்டம்பர் 9ம் தேதியுடன் முடிவடைந்த 15 நாட்களில் இந்தியாவில் டெபாசிட்களின் மதிப்பு, ஆண்டுக்கு ஆண்டு 9.5% அதிகரித்துள்ளது. செப்டம்பர் 2022 வரையிலான இரண்டு வாரங்களில், இந்தியாவில் கடன்களின் மதிப்பு ஆண்டுக்கு 16.40% அதிகரிப்புள்ளது. அதே நாளில் வெளிநாட்டு பரிமாற்ற கையிருப்பு தரவுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்னிய செலவாணி கையிருப்பு தரவு

அன்னிய செலவாணி கையிருப்பு தரவு

அன்னிய செலவாணி கையிருப்பு தரவுகளும் வெளியிடப்படும். இந்திய அன்னிய செலவாணி கையிருப்பு செப்டம்பர் 30 அன்று 532.66 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இது முந்தைய வாரத்தில் 545.65 பில்லியன் டாலராகும். அடுத்த வாரம் வெளியிடப்படும் சில முக்கியமான காலாண்டு எண்களையும் முதலீட்டாளர்கள் கண்கானிப்பாளர்கள்.

காலாண்டு முடிவுகள்
 

காலாண்டு முடிவுகள்

இது தவிர காலாண்டு முடிவுகளையும் முதலீட்டாளர்களை உன்னிப்பாக கவனிக்கலாம். வரும் வாரம் தங்கள் காலாண்டு முடிவுகளை வெளியிடும் நிறுவனங்களில், ஏசிசி மற்றும் பிவிஆர் ஆகியவை அக்டோபர் 17 அன்று வெளியாகவுள்ளது. அக்டோபர் 19 அன்று நெஸ்லே இந்தியா, அல்ட்ராடெக் சிமெண்ட், இந்தஸ்இந்த் வங்கி, ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், டாடா நுகர்வோர் பொருட்கள், ஆக்ஸிஸ் வங்கி மற்றும் ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்கள் அக்டோபர் 20 அன்று வெளியிடவுள்ளன.

பல முக்கிய முடிவுகள்

பல முக்கிய முடிவுகள்

இதே அக்டோபர் 21 அன்று பஜாஜ் பின்செர்வ், ஹெச் டி எஃப் சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், ஜே எஸ் டபள்யூ ஸ்டீல், ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் அக்டோபர் 21 அன்று வெளியாகவுள்ளன. இதே அக்டோபர் 22 அன்று ஐசிஐசிஐ வங்கி, கோடக் மகேந்திரா வங்கி தங்களது காலாண்டு முடிவினை வெளியிடவுள்ளது.

அன்னிய முதலீடுகள்

அன்னிய முதலீடுகள்

மேலும் சர்வதேச காரணிகளும் சந்தையில் பிரதிபலிக்கலாம். சர்வதேச சந்தையில் ஏற்படும் அழுத்தத்தின் மத்தியில் ஷார்ட் கவரிங்கும் இருக்கலாம். இங்கிலாந்தின் நடவடிக்கை என பலவும் கவனிக்க வேண்டியவைகளில் ஒன்றாக உள்ளது. இதற்கிடையில் அன்னிய முதலீடுகளின் போக்கு, உள்நாட்டு முதலீடுகள் என அனைத்தும் சந்தையில் பிரதிபலிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sensex, nifty: key factors may influence market next week and key results to watch out for

Coming week is expected to have a huge impact on the market. A lot of important data is coming out. Many Indian companies are about to publish their quarterly results.
Story first published: Sunday, October 16, 2022, 21:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X