ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 4.3% உயர்வு.. ஐடி பங்குகள் தொடர் சரிவு..!
சர்வதேச சந்தையின் மந்தமான வர்த்தகச் சூழ்நிலையில் இந்திய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும், ஒவ்வொரு துறையில் இருக்கும் பிரச்சனைகளும் மிகப்பெரியதாக விளங்குகிறது. இதன் வாயிலாகத் திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவு செவ்வாய்க்கிழமையும் தொடர்கிறது.
நேற்றைய வர்த்தக முடிவில் ஹெச்டிஎப்சி, ஹெசிடிஎப்சி, இன்போசிஸ் பங்குகளின் அதிகப்படியான சரிவின் மூலம் சென்செக்ஸ் ஒருமாத சரிவுக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு உள்ளது.
Apr 19, 2022, 3:49 pm IST
சென்செக்ஸ் குறியீடு 703.59 புள்ளிகள் சரிந்து 56,463.15 புள்ளிகளை அடைந்தது
Apr 19, 2022, 3:49 pm IST
நிஃப்டி குறியீடு 215.00 புள்ளிகள் சரிந்து 16,958.65 புள்ளிகளை அடைந்தது
Apr 19, 2022, 3:49 pm IST
ஐயன்மேன் குரூப் ஓஷனியா நிறுவனத்துடன் டிசிஎஸ் பல ஆண்டு ஒப்பந்தம்
Apr 19, 2022, 3:49 pm IST
அஜ்மெரா ரியாலிட்டி 6 புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய முடிவு
Apr 19, 2022, 3:49 pm IST
6 புதிய கட்டுமான திட்டம் மூலம் 4000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் - அஜ்மெரா ரியாலிட்டி
Apr 19, 2022, 3:48 pm IST
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனத்தில் ரிலையன்ஸ், ஐசிஐசிஐ மட்டுமே உயர்வுடன் உள்ளது
Apr 19, 2022, 3:48 pm IST
நிஃப்டி ஐடி குறியீடு 3 சதவீதம் சரிவு; எப்எம்சிஜி, மீடியா, பார்மா, ரியாலிட்டி ஆகியவை அதிகப்படியான சரிவு
Apr 19, 2022, 3:48 pm IST
சென்செக்ஸ் குறியீடு 56009.07 புள்ளிகள் வரையில் சரிவு
Apr 19, 2022, 3:48 pm IST
லிபியா கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பாதிப்பு
Apr 19, 2022, 3:47 pm IST
சீனாவில் ஷாங்காய் தொழிற்சாலைகள் கட்டுப்பாடு உடன் திறக்க முடிவு
Apr 19, 2022, 3:47 pm IST
கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு
Apr 19, 2022, 3:43 pm IST
டெல்லி சாலை போக்குவரத்துத் துறை சில முக்கிய வாகனங்களுக்கான சாலை வரியை உயர்த்த பரிந்துரை செய்துள்ளது
Apr 19, 2022, 3:43 pm IST
தற்போது டெல்லி-யில் சாலை வரி 12.5 சதவீதமாக உள்ளது
Apr 19, 2022, 3:43 pm IST
இந்திய வேலைவாய்ப்பு சந்தை மார்ச் மாதம் சுமார் 6 சதவீதம் வரையிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது
Apr 19, 2022, 3:43 pm IST
இந்தியாவில் இருந்து டீ, அரிசி, பழங்கள், காஃபி பொருட்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி துவங்கப்பட்டு உள்ளது.
Apr 19, 2022, 3:43 pm IST
Sberbank உதவியுடன் பேமெண்ட் செய்ய முடிவு
Apr 19, 2022, 3:43 pm IST
இந்தியாவில் கோதுமை விளைச்சல் கணிசமாகக் குறைந்த நிலையில் விலை 5-7% வரை உயர்வு
Apr 19, 2022, 3:42 pm IST
பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கோதுமை உற்பத்தி 10-35 சதவீதம் சரிவு
Apr 19, 2022, 3:38 pm IST
ஹெச்டிஎப்சி டிவின்ஸ் முதலீட்டாளர்களுக்கு 9 நாளில் 2.6 லட்சம் கோடி ரூபாய் இழப்பு
Apr 19, 2022, 3:38 pm IST
அனைத்து கடனுக்கான வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் உயர்த்தியது கோட்டாக் மஹிந்திரா வங்கி. புதிய வட்டி விகிதம் ஏப்ரல் 16 முதல் அமல்
Apr 19, 2022, 3:37 pm IST
ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்திற்கு பின் எஸ்பிஐ வங்கி 0.10 சதவீதமும், பேங்க் ஆப் பரோடா மற்றும் ஆக்சிஸ் வங்கி தலா 0.05 சதவீதமும் கடனுக்கான வட்டியை அதிகரித்துள்ளது
Apr 19, 2022, 3:37 pm IST
ஆக்சிஸ் வங்கி கடனுக்கான வட்டி விகித்தை 0.05 சதவீதம் உயர்த்தியுள்ளது. புதிய வட்டி விகிதம் ஏப்ரல் 16 முதல் அமல்.
Apr 19, 2022, 3:37 pm IST
விதிமுறை மீறிய காரணத்தால் மணப்புரம் பைனான்ஸ் மீது 17 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது ஆர்பிஐ
Apr 19, 2022, 3:37 pm IST
அதிக மதிப்புடைய நிறுவனங்களின் டாப் 10 பட்டியலிலிருந்து வெளியேறிய ஹெச்டிஎப்சி. ரூ.90000 கோடி சந்தை மதிப்பு மாயம், முதலீட்டாளர்கள் சோகம்
Apr 19, 2022, 3:37 pm IST
பன்னாட்டு முதலீட்டாளர்களின் அதீத விற்பனையால் ஐடி பங்குகள் தொடர் சரிவு
Apr 19, 2022, 3:37 pm IST
இந்திய ரீடைல் முதலீட்டாளர்கள் நீண்ட கால அடிப்படையில் 2 வருட சரிவைப் பயன்படுத்தி ஐடி பங்குகளில் முதலீடு செய்யத் துவங்கினர்
Apr 19, 2022, 3:36 pm IST
கிரிப்டோ பண மோசடிகளைத் தடுக்க குளோபல் ப்ரேம்வொர்க் உருவாக்கலாம் என ஐஎம்எப் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கூறினார்
Apr 19, 2022, 3:36 pm IST
உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு குறித்த விவாதம் ஐஎம்எப் - உலக வங்கி கூட்டத்தில் முக்கியத்துவம் பெற்றது
Apr 19, 2022, 3:36 pm IST
மத்திய அரசு ஏப்ரல் 25-29ஆம் தேதியில் எல்ஐசி நிறுவனத்தின் வெளியிட வாய்ப்பு; 3 பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம்
Apr 19, 2022, 3:36 pm IST
விப்ரோ இந்தியா-வின் புதிய தலைவராக சத்ய ஈஸ்வரன் நியமனம். இவர் KPMG நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரி ஆவார்.
Apr 19, 2022, 3:36 pm IST
பி அண்ட் ஜி இந்திய வர்த்தகத்தின் புதிய சிஇஓ-வாக எல்வி வைத்தியநாதன் நியமனம். ஜூலை 1 முதல் இவரின் பணி துவங்கும்.
Apr 19, 2022, 2:19 pm IST
சென்செக்ஸ் குறியீடு 256.15 புள்ளிகள் உயர்ந்து 57,430.91 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 19, 2022, 2:19 pm IST
நிஃப்டி குறியீடு 87.85 புள்ளிகள் உயர்ந்து 17,261.50 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 19, 2022, 2:18 pm IST
பணவீக்கம் மற்றும் விலைவாசி பாதிப்பு அதிகமாக இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் முன் சரியான துறையைத் தேர்வு செய்ய வேண்டும்
Apr 19, 2022, 2:18 pm IST
மைண்ட்ட்ரீ மற்றும் எல் அண்ட் டி இன்போடெக் இணைப்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது - தேபாஷிஸ் சாட்டர்ஜி
Apr 19, 2022, 2:18 pm IST
மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகத்தை 14.2சதவீதம் அதிகரித்துள்ளது கோல் இந்தியா
Apr 19, 2022, 2:17 pm IST
மார்ச் காலாண்டில் பெட்ரோல், டீசல் விற்பனையில் நஷ்டத்தை எதிர்கொண்ட இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள்
Apr 19, 2022, 2:17 pm IST
ஆட்டோமொபைல் பங்குகள் இன்று உயர்வு
Apr 19, 2022, 2:17 pm IST
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகள் 1.99 சதவீதம் உயர்வு
Apr 19, 2022, 12:28 pm IST
சென்செக்ஸ் குறியீடு 209.35 புள்ளிகள் உயர்ந்து 57,376.09 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 19, 2022, 12:28 pm IST
நிஃப்டி குறியீடு 28.55 புள்ளிகள் உயர்ந்து 17,245.75 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 19, 2022, 12:27 pm IST
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியார்மயமாக்குவதில் தாமதம்
Apr 19, 2022, 12:27 pm IST
நிஃப்டி நிதியியல் சேவை, ஐடி குறியீடு சரிவு
Apr 19, 2022, 12:27 pm IST
3 வருட இலக்குடன் ஐடி பங்குகளில் முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு
Apr 19, 2022, 12:27 pm IST
மைண்ட்ட்ரீ பங்குகள் 2.6 சதவீதம் வரையில் சரிவு
Apr 19, 2022, 12:27 pm IST
ரிலையன்ஸ் பங்குகள் 4 சதவீதம் வரையில் உயர்வு
Apr 19, 2022, 12:27 pm IST
9 நாளில் ஹெச்டிஎப்சி டிவின்ஸ் முதலீட்டாளர்களுக்கு 2.6 லட்சம் கோடி இழப்பு
Apr 19, 2022, 11:31 am IST
சென்செக்ஸ் வெறும் 32.63 புள்ளிகள் உயர்வுடன் 57,199.37 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 19, 2022, 11:31 am IST
நிஃப்டி குறியீடு 26.35 புள்ளிகள் உயர்வுடன் 17,200 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 19, 2022, 11:16 am IST
கச்சா எண்ணெய் விலை 113 டாலரை தொட்டது
Apr 19, 2022, 11:16 am IST
ஆசிய சந்தை உயர்வுடன் துவங்கினாலும் மந்தமான வர்த்தகத்தையே பதிவு செய்துள்ளது
Apr 19, 2022, 11:16 am IST
டாலருக்கு எதிரான யென் மதிப்பு 20 வருட சரிவை எட்டியுள்ளது
Apr 19, 2022, 11:16 am IST
9வது நாளாக சரியும் ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள்
Apr 19, 2022, 11:16 am IST
மும்பை பங்குச் சந்தையில் மைண்ட்ட்ரீ பங்குகள் 1.97 சதவீதம் சரிவு
Apr 19, 2022, 11:15 am IST
2023ஆம் நிதியாண்டில் சிட்டி வங்கியின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.8 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது
Apr 19, 2022, 11:15 am IST
ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் தொடர் சரிவு
Apr 19, 2022, 11:15 am IST
ஹெச்டிஎப்சி டிவின்ஸ், இன்போசிஸ், கோட்டாக் மஹிந்திரா வங்கி, எல் அண்ட் டி டிசிஎஸ் பங்குகள் அதிகளவில் விற்பனை
Apr 19, 2022, 11:15 am IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 76.31 ஆக உள்ளது
Apr 19, 2022, 11:15 am IST
காலை வர்த்தக துவக்கத்தில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரையில் உயர்ந்தது
Share This Article
English summary
Sensex nifty live today 2022 April 19: brent crude bitcoin gold price Mindtree share price results Larsen Toubro infotech
sensex nifty live today 2022 April 19: brent crude bitcoin gold price Mindtree share price results larsen toubro infotech தடுமாறும் மும்பை பங்குச்சந்தை.. மைண்ட்ட்ரீ பங்குகள் சரிவு..!
Story first published: Tuesday, April 19, 2022, 15:52 [IST]