ஆசை காட்டி மோசம் செய்த மும்பை பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 460 புள்ளிகள் சரிவு..!
இந்திய பங்குச்சந்தை நேற்றைய வர்த்தக உயர்வின் தாக்கத்திலும், ஆசிய மற்றும் அமெரிக்கப் பங்குச்சந்தையின் வளர்ச்சி மூலம் காரணமாக இன்று உயர்வுடன் துவங்கி தொடர்ந்து முதலீட்டை பெற்று வருகிறது.
இந்திய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் இன்றைய வர்த்தக உயர்வுக்கு மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகப்படியான வர்த்தகத் தடுமாற்றத்தை எதிர்கொண்டாலும், தொடர்ந்து உயர்வுடனே இருப்பது மிகவும் முக்கியமாக விளங்குகிறது. இதேபோல் இன்றைய ஐரோப்பிய சந்தையின் துவக்கம் மும்பை பங்குச்சந்தைக்கு ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Apr 29, 2022, 3:36 pm IST
மாருதி சுசூகி மார்ச் காலாண்டில் 57.7% அதிக லாபத்தை பெற்றுள்ளது
Apr 29, 2022, 3:36 pm IST
1839.9 கோடி ரூபாய் லாபத்தை பெற்றுள்ளது
Apr 29, 2022, 3:36 pm IST
சென்செக்ஸ் குறியீடு 460.19 புள்ளிகள் சரிந்து 57,060.87 புள்ளிகளை எட்டியது
Apr 29, 2022, 3:36 pm IST
நிஃப்டி குறியீடு 142.50 புள்ளிகள் சரிந்து 17102.55 புள்ளிகளை எட்டியது
Apr 29, 2022, 3:36 pm IST
ரீடைல் முதலீட்டாளர்களை ஆசை காட்டி மோசம் செய்தது
Apr 29, 2022, 3:35 pm IST
வாரத்தின் கடைசி நாளில் அதிகப்படியான சரிவை பதிவு செய்துள்ளது
Apr 29, 2022, 2:59 pm IST
சென்செக்ஸ் குறியீடு வெறும் 62 புள்ளிகள் உயர்வில் 57,583.55 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 29, 2022, 2:58 pm IST
நிஃப்டி குறியீடு 14.35 புள்ளிகள் உயர்ந்து 17,259.40 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 29, 2022, 2:58 pm IST
எல்ஐசி ஐபிஓ முடிந்து மே 17ஆம் தேதி பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும்
Apr 29, 2022, 2:58 pm IST
நிஃப்டி ஆட்டோ குறியீடு 0.6 சதவீதம் உயர்வு
Apr 29, 2022, 2:58 pm IST
இனி வரும் காலத்தில் மொபிலிட்டி உலகில் டெக்னாலஜியின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கும் - டாடா மோட்டார்ஸ் சேர்மன் என் சந்திரசேகரன்
Apr 29, 2022, 2:58 pm IST
நிலக்கரி சப்ளை-ஐ அதிகரிக்க 657 பயணிகள் ரயில் ரத்து
Apr 29, 2022, 2:58 pm IST
டிவி18 பிராட்காஸ்ட் பங்குகள் 10.60 சதவீதம் சரிவு
Apr 29, 2022, 2:57 pm IST
பியூச்சர் குரூப் பங்குகள் தொடர் சரிவு
Apr 29, 2022, 2:57 pm IST
3வது நாள் முடிவில் ரெயின்போ மெடிகேர் ஐபிஓ பங்குகளுக்கு 1.37 மடங்கு முதலீடு குவித்துள்ளது
Apr 29, 2022, 2:57 pm IST
அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் மார்ச் காலாண்டில் 2614 கோடி ரூபாய் லாபமாக பெற்றுள்ளது
Apr 29, 2022, 12:11 pm IST
நிஃப்டி ஹெல்த்கேர் பங்குகள் 0.9 சதவீதம் சரிவு
Apr 29, 2022, 12:11 pm IST
ஆக்சிஸ் வங்கி பங்குகள் 5 சதவீதம் சரிவு
Apr 29, 2022, 12:11 pm IST
ஜின்டால் பாலிமர் எஸ்எம்ஐ கோட்டெட் ப்ராடெக்ட் நிறுவனத்தை 198 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது
Apr 29, 2022, 12:11 pm IST
பயோகான் வருமானம் 31 சதவீதம் அதிகரிப்பு
Apr 29, 2022, 12:11 pm IST
அமெரிக்க பங்குச்சந்தை உயர் மெட்டா மற்றும் ஆப்பிள் காலாண்டு முடிவுகள் பெரிய அளவில் உதவியுள்ளது
Apr 29, 2022, 12:10 pm IST
ஹெச்டிஎப்சி வங்கியின் 10 லட்சம் பங்குகள் பிளாக் டீலில் விற்பனை
Apr 29, 2022, 12:10 pm IST
சோமேட்டோ நிறுவனத்தின் பங்குகள் புதிய வரலாற்று சரிவுக்கு தள்ளப்பட்டு உள்ளது
Apr 29, 2022, 12:10 pm IST
சோமேட்டோ பங்குகள் 71.90 ரூபாய்க்கு சரிவு
Apr 29, 2022, 12:10 pm IST
ருச்சி சோயா FPO முதலீட்டாளர்கள் 75 சதவீத லாபத்தை பெற்றுள்ளனர்
Apr 29, 2022, 12:10 pm IST
ஜீனஸ் பவர் 828.57 கோடி ரூபாய் பங்குகளை கைப்பற்றியுள்ளது
Apr 29, 2022, 12:09 pm IST
எல்ஐசி ஐபிஓ-வில் சிங்கப்பூர், நார்வே, அபுதாபி நாடுகளின் சவ்ரினன் பண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது
Apr 29, 2022, 12:09 pm IST
34.3 IEX பங்குகள் பிளாக் டீல் மூலம் கை மாறியது
Apr 29, 2022, 12:09 pm IST
இன்று விப்ரோ, மாருதி சுசூகி, அல்ட்ராடெக் சிமெண்ட், இண்டஸ்இண்ட் வங்கி காலாண்டு முடிவுகளை வெளியிடுகிறது
Share This Article
English summary
sensex nifty live today 2022 April 29: axis bank maruti wipro sbi cards vedanta brent crude bitcoin gold rate
sensex nifty live today 2022 April 29: axis bank maruti wipro sbi cards vedanta brent crude bitcoin gold rate 340 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. சன்பார்மா பங்குகள் அசத்தல்..!
Story first published: Friday, April 29, 2022, 15:37 [IST]