508 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. இன்போசிஸ், ஹெச்சிஎல் பங்குகள் சரிவு..!
உலக நாடுகள் அனைத்தும் ஜூன் மாதப் பணவீக்க தரவுகளுக்காகவும், அதைத் தொடர்ந்து மத்திய வங்கிகள் எடுக்கும் முடிவிற்காகவும் காத்திருக்கின்றனர். இதனால் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் துவங்கும் போதே ஆசியச் சந்தை சரிவுடன் காணப்பட்டதால் 200 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது சென்செக்ஸ் குறியீடு.
இதன் எதிரொலியாகக் காலை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 79.60 என்ற மோசமான நிலையை அடைந்துள்ளது.
இதற்கிடையில் இன்று மாலை மத்திய அரசு ஜூன் மாதத்திற்கான ரீடைல் பணவீக்கத்தை வெளியிடுகிறது, இதேபோல் புதன்கிழமை அமெரிக்கா தனது பணவீக்கத்தை வெளியிடுகிறது. இந்தியா முதல் அமெரிக்கா வரையில் அனைத்து நாடுகளும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்துவதில் உறுதியாக உள்ளது.
Jul 12, 2022, 4:12 pm IST
சென்செக்ஸ் குறியீடு 508.62 புள்ளிகள் சரிந்து 53,886.61 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 12, 2022, 4:12 pm IST
நிஃப்டி குறியீடு 157.70 புள்ளிகள் சரிந்து 16,058.30 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 12, 2022, 4:12 pm IST
இன்போசிஸ் பங்குகள் 2.33 சதவீத சரிவு
Jul 12, 2022, 4:11 pm IST
நெஸ்லே பங்குகள் 1.87 சதவீதம் சரிவு
Jul 12, 2022, 4:11 pm IST
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனத்தில் 3 நிறுவனங்கள் மட்டுமே உயர்வுடன் உள்ளது
Jul 12, 2022, 4:11 pm IST
என்டிபிசி, பார்தி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை உயர்வுடன் உள்ளது
Jul 12, 2022, 4:11 pm IST
2002-க்கு பின் முதல் முறையாக டாலரை காட்டிலும் யூரோ சரிந்தது
Jul 12, 2022, 4:11 pm IST
சில நிமிடங்களுக்குள் டாலர் - யூரோ மதிப்பு 1 என நிலையானது
Jul 12, 2022, 4:11 pm IST
மாருதி சுசூகி அடுத்த இரண்டு வருடத்தில் வருவாயில் 22 சதவீத வளர்ச்சியை பதிவு செய்யும் - சித்தார்தா
Jul 12, 2022, 4:10 pm IST
NHAI அமைப்பிடம் இருந்து ரெயில் விகாஸ் நிகாம் சுமார் 1845 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை கைப்பற்றியது
Jul 12, 2022, 4:10 pm IST
ரெயில் விகாஸ் நிகாம் பங்குகள் 2 சதவீதத்திற்கு மேல் உயர்வு
Jul 12, 2022, 4:10 pm IST
ஜூன் காலாண்டில் ரிலையன்ஸ் ஜூன் காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருக்கும் - தயாநத் மிட்டல்
Jul 12, 2022, 4:10 pm IST
ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்காக விண்ணப்பம் செய்த நிறுவனங்களை டெலிகாம் அமைச்சகம் வெளியிட்டுள்ளது
Jul 12, 2022, 4:10 pm IST
அதானி டேட்டா நெட்வொர்க்ஸ், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பம் அளித்துள்ளது
Jul 12, 2022, 4:09 pm IST
வெளிநாட்டு நாணயத்தில் என்ஆர்ஐ-களுக்கான வைப்பு நிதிக்கான (FCNR Deposits) வட்டி விகிதத்தை 85 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியது எஸ்பிஐ
Jul 12, 2022, 2:05 pm IST
டெபிட் மியூச்சவல் பண்ட் சந்தையில் இருந்து ஜூன் மாதம் 92,248 கோடி வெளியேற்றம்
Jul 12, 2022, 2:05 pm IST
கேம்ஸ்டாப் NFT மார்கெட்பிளேஸ் தளத்தை அறிமுகம் செய்துள்ளது
Jul 12, 2022, 2:05 pm IST
ஜூலை 15ஆம் தேதி MRPL நிர்வாக குழு கூட்டம்
Jul 12, 2022, 2:05 pm IST
ஹெச்சிஎல் ஜூன் காலாண்டில் இரண்டு இலக்கு லாபத்தை காணலாம்
Jul 12, 2022, 2:04 pm IST
பிஎஸ்ஈ மிட்கேப் குறியீடு சரிவு
Jul 12, 2022, 2:04 pm IST
காலாண்டு முடிவுகளை வெளியிடும் ஹெச்சிஎல் பங்குகள் இன்று 52 வார சரிவை தொட்டது
Jul 12, 2022, 2:04 pm IST
சீனாவின் தளர்வுகளால் லண்டனில் காப்பர் விலை உயர்வு
Jul 12, 2022, 2:04 pm IST
டாப் 10 எலைட் கிளப்-ல் ஐடிசி நுழைந்தது
Jul 12, 2022, 2:03 pm IST
இந்தியாவில் அடுத்த 5 வருடத்தில் 200 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்ய உள்ளது BOSCH
Jul 12, 2022, 10:54 am IST
சென்செக்ஸ் குறியீடு 211.36 புள்ளிகள் சரிந்து 54,183.87 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 12, 2022, 10:54 am IST
நிஃப்டி குறியீடு 69.05 புள்ளிகள் சரிந்து 16,146.95 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 12, 2022, 10:54 am IST
ஹெச்சிஎல் டெக் நிறுவனம் இன்று காலாண்டு முடிவுகளை வெளியிடுகிறது
Jul 12, 2022, 10:53 am IST
ஹெச்சிஎல் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 1.7 சதவீதம் வரையில் சரிந்துள்ளது
Jul 12, 2022, 10:53 am IST
இந்திய பார்மா சந்தை ஜூன் மாதத்தில் 13 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது
Jul 12, 2022, 10:53 am IST
பிரெண்ட் கச்சா எண்ணெய் 105 டாலராக குறைந்தது
Jul 12, 2022, 10:53 am IST
இந்தியன் பேங்க் பங்குகள் 7.42 சதவீதம் உயர்வு
Jul 12, 2022, 10:53 am IST
சிறு மற்றும் நடுத்தர வங்கி பங்குகள் அனைத்தும் உயர்வுடன் உள்ளது
Jul 12, 2022, 10:53 am IST
தங்கம், கிரிப்டோ, பவுண்ட், யென் ஆகிய அனைத்தும் சரிவு
Jul 12, 2022, 10:52 am IST
அமெரிக்கா டாலர் மற்றும் சந்தை ஆதிக்கம்; முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றத்திற்குத் தயாராகுங்கள் - உதய் கோட்டாக்
Jul 12, 2022, 10:52 am IST
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு இந்த வார இறுதிக்குள் 80-ஐ தொடும்
Jul 12, 2022, 10:52 am IST
அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 20.89 சதவீதம் உயர்வு
Jul 12, 2022, 10:52 am IST
மின்சார உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்கள் உயர்வு
Jul 12, 2022, 10:52 am IST
மும்பையில் டேட்டா சென்டர் அமைக்கும் மிகப்பெரிய திட்டத்தை L&T கைப்பற்றியுள்ளது
Jul 12, 2022, 10:52 am IST
சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகத்தில் 300 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது
Jul 12, 2022, 10:52 am IST
ஆசிய பங்குச்சந்தைகள் 2 வருட சரிவில் உள்ளது
Share This Article
English summary
Sensex Nifty Live updates 12 july 2022: hcl tech share price rupee crude gold covid
Sensex Nifty Live updates 12 july 2022: hcl tech share price rupee crude gold covid வரலாற்றுச் சரிவில் ரூபாய் மதிப்பு.. 200 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..!
Story first published: Tuesday, July 12, 2022, 16:22 [IST]