ஏறிய வேகத்தில் இறங்கிய சென்செக்ஸ்.. 121 புள்ளிகள் சரிவு..!
மும்பை பங்குச்சந்தை 2022ஆம் ஆண்டிலேயே குறைவான அளவீட்டை வியாழக்கிழமை சென்செக்ஸ் குறியீடு தொட்ட நிலையில், வெள்ளிக்கிழமை ஆசியச் சந்தையில் ஏற்பட்ட உயர்வுடனும், அமெரிக்கப் பணவீக்க தரவுகளின் எதிரொலியாகவும் இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் சில தடுமாற்றத்திற்குப் பின்பு 590 புள்ளிகள் வரையில் உயர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் நிதியியல், எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆட்டோமொபைல், ஐடி பங்குகள் உயர்வுடன் காணப்படுகிறது.
9 மாத சரிவில் இருந்த நிஃப்டியை ரிலையன்ஸ், இன்போசிஸ், ஹெச்டிஎப்சி, ஐடிசி நிறுவனங்கள் தூக்கிவிட்டது.
May 13, 2022, 3:50 pm IST
சென்செக்ஸ் குறியீடு 136.69 புள்ளிகள் சரிந்து 52,793.62 புள்ளிகளை எட்டியுள்ளது
May 13, 2022, 3:49 pm IST
நிஃப்டி குறியீடு 25.85 புள்ளிகள் சரிந்து 15,782.15 புள்லிகளை எட்டியுள்ளது
May 13, 2022, 3:49 pm IST
சென்செக்ஸ் குறியீடு 6வது நாளாக சரிவு
May 13, 2022, 3:49 pm IST
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்களில் 15 நிறுவனங்கள் சரிவு
May 13, 2022, 3:49 pm IST
அடுத்த 2 நாணய கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி 0.75% வரையில் வட்டியை உயர்த்தலாம்
May 13, 2022, 3:49 pm IST
டிவிட்டர் கைப்பற்றல் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்
May 13, 2022, 3:36 pm IST
230 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்
May 13, 2022, 3:35 pm IST
15800 புள்ளிகளுக்கு கீழ் சரிந்த நிஃப்டி
May 13, 2022, 3:35 pm IST
பியூச்சர் லைப்ஸ்டைல், தானி சர்வீசஸ், பியூச்சர் ரீடைல் பங்குகள் 52 வார சரிவு
May 13, 2022, 3:35 pm IST
எஸ்பிஐ காலாண்டு முடிவுகளுக்கு பின்பு சென்செக்ஸ், நிஃப்டி சரிவு
May 13, 2022, 3:35 pm IST
யூனியன் பேங்க் ஆப் இந்தியா-வின் லாபம் 8% உயர்ந்து 1440 கோடி ரூபாயை பெற்றது
May 13, 2022, 3:35 pm IST
3வது நாளில் வீனஸ் பைப் அண்ட் டியூப்ஸ் 10 மடங்கு முதலீட்டை பெற்றது
May 13, 2022, 3:35 pm IST
ஐசிஐசிஐ வங்கி பங்குகள் 702.40 ரூபாயை தொட்டு 3 சதவீதம் வரையில் சரிவு
May 13, 2022, 3:34 pm IST
பந்தன் வங்கி மார்ச் காலாண்டில் 1902 கோடி ரூபாய் லாபத்தை பெற்றது
May 13, 2022, 1:49 pm IST
சென்செக்ஸ் குறியீடு 743.43 புள்ளிகள் உயர்ந்து 53673.74 புள்ளிகளை எட்டியுள்ளது
May 13, 2022, 1:49 pm IST
நிஃப்டி குறியீடு 253.95 புள்ளிகள் உயர்ந்து 16,061.95 புள்ளிகளை எட்டியுள்ளது
May 13, 2022, 1:49 pm IST
எஸ்பிஐ வங்கி மார்ச் காலாண்டில் 9110 கோடி ரூபாய் லாபத்தை பெற்றுள்ளது
May 13, 2022, 1:49 pm IST
3வது நாளில் டெல்லிவரி ஐபிஓ பங்குகளுக்கு முழுமையாக முதலீடு குவிந்துள்ளது
May 13, 2022, 1:49 pm IST
ஜூன் 8ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம்
May 13, 2022, 1:49 pm IST
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ரேட்டிங்-ஐ BBB- என உயர்த்தியது S&P
May 13, 2022, 1:48 pm IST
எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் வெள்ளிக்கிழமை தனது வட்டி விகிதத்தை 20 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 6.9 சதவீதமாக உயர்த்தியுள்ளது
May 13, 2022, 1:48 pm IST
அவன்டி பீட்ஸ் நிறுவன பங்குகள் 15.47% உயர்ந்து 465.40 ரூபாயாக உயர்வு
May 13, 2022, 1:48 pm IST
சென்செக்ஸ் குறியீடு 700 புள்ளிகள் வரையில் உயர்வு
May 13, 2022, 11:46 am IST
சென்செக்ஸ் குறியீடு 605.95 புள்ளிகள் உயர்ந்து 53,536.26 புள்ளிகளை எட்டியுள்ளது
May 13, 2022, 11:46 am IST
நிஃப்டி குறியீடு 207.30 புள்ளிகள் உயர்ந்து 16,015.30 புள்ளிகளை எட்டியுள்ளது
May 13, 2022, 11:45 am IST
இந்திய நிறுவனங்களின் மதிப்பீடு அதிகமாகவே உள்ளது - கிரெடிட் சுசூசி டேன்
May 13, 2022, 11:45 am IST
எல் அண்ட் டி பங்குகள் 2.9 சதவீதம் உயர்ந்து 1567.8 ரூபாயாக உயர்வு
May 13, 2022, 11:45 am IST
டைட்டன் நகை விற்பனை 2.5 மடங்கு அதிகரித்து 2027ஆம் நிதியாண்டுக்குள் 60000 கோடி ரூபாயை தொடும் - டைட்டன்
May 13, 2022, 11:45 am IST
3வருடத்தில் புதிதாக 600 கடைகளைத் திறக்க டைட்டன் முடிவு
May 13, 2022, 11:45 am IST
2026ஆம் நிதியாண்டுக்குள் 10000 கோடி ரூபாய் வருவாய் ஈர்க்க திட்டம்
May 13, 2022, 11:45 am IST
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 77.42 ஆக உள்ளது
May 13, 2022, 11:44 am IST
எஸ்பிஐ, டெக் மஹிந்திரா நிறுவனம் இன்று காலாண்டு முடிவுகளை வெளியிடுகிறது
May 13, 2022, 11:44 am IST
பிஎஸ்ஈ மிட்கேப் இன்டெக்ஸ் 2.30 சதவீதம் உயர்வு
May 13, 2022, 11:44 am IST
டாடா மோட்டார்ஸ் பங்குகள் 8 சதவீதம் வரையில் உயர்வு
Share This Article
English summary
Sensex Nifty live updates 13 may 2022: delhivery ipo tata motors sbi tech mahindra covid lockdown brent crude bitcoin gold rate vix
Sensex Nifty live updates 13 may 2022: delhivery ipo tata motors sbi tech mahindra covid lockdown brent crude bitcoin gold rate vix 590 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. 9 மாத சரிவில் மீண்ட நிஃப்டி..!
Story first published: Friday, May 13, 2022, 17:15 [IST]