1045.60 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. நெஸ்லே மட்டும் தப்பித்தது..!
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் சந்தை கணிப்புகள் படி தனது பென்ச்மார்க் வட்டியை 0.75 சதவீதம் வரையில் உயர்த்தியது, மேலும் அடுத்த கொள்கை கூட்டத்தில் 0.75 அல்லது 0.50 சதவீதம் வரையில் வட்டியை உயர்த்த திட்டமிட்டு வருகிறது. இதோடு தனது பொருளாதார வளர்ச்சி அளவீட்டை குறைக்கவும் திட்டமிட்டு வருகிறது.
இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தை காலை வர்த்தகம் துவங்கும் முன்பு உயர்வுடன் துவங்கினாலும் தொடர்ந்து சரிவு சந்தித்து வருகிறது.
Jun 16, 2022, 3:56 pm IST
சென்செக்ஸ் குறியீடு 1045.60 புள்ளிகள் சரிந்து 51,495.79 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 16, 2022, 3:55 pm IST
நிஃப்டி குறியீடு 331.55 புள்ளிகள் சரிந்து 15,360.60 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 16, 2022, 3:55 pm IST
நேரடி வரி வசூல் அளவு 51 சதவீதம் உயர்வு
Jun 16, 2022, 3:55 pm IST
ஏப்ரல் 1 முதல் ஜூன் 15 வரையிலான காலத்தில் 2.8 லட்சம் கோடி ரூபாய் உயர்வு
Jun 16, 2022, 3:54 pm IST
அட்வான்ஸ் வரி வசூல் 49 சதவீதம் உயர்வு
Jun 16, 2022, 3:54 pm IST
52 வார சரிவில் நிஃப்டி குறியீடு
Jun 16, 2022, 3:54 pm IST
இன்றைய வர்த்தக சரிவில் 4 லட்சம் கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் இழந்தனர்
Jun 16, 2022, 3:54 pm IST
பிஎஸ்ஈ மெட்டல் இன்டெக்ஸ் 4 சதவீதம் சரிவு
Jun 16, 2022, 2:31 pm IST
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டின் டாப் நிறுவனங்களின் நிலவரம்
Jun 16, 2022, 2:21 pm IST
நிப்டி வங்கி மற்றும் நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 20 சதவீதத்திற்கு மேல் சரிவு
Jun 16, 2022, 2:21 pm IST
52000 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்
Jun 16, 2022, 1:26 pm IST
சென்செக்ஸ் குறியீடு 618.79 புள்ளிகள் சரிந்து 51,922.60 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 16, 2022, 1:26 pm IST
நிஃப்டி குறியீடு 87.05 புள்ளிகள் சரிந்து 15,605.10 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 16, 2022, 1:25 pm IST
நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு இன்றைய உச்சத்தில் இருந்து 20% சரிவு
Jun 16, 2022, 1:25 pm IST
மருத்துவ பரிசோதனை நிறுவனப் பங்குகள் உயர்வு
Jun 16, 2022, 1:25 pm IST
2 மாதத்தில் நேற்று கோவிட் பரிசோதனை எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது
Jun 16, 2022, 1:25 pm IST
660 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் இருக்கும் போது டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஐசிஐசிஐ மட்டுமே உயர்வுடன் உள்ளது
Jun 16, 2022, 1:25 pm IST
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விமான கட்டணத்தை 15 சதவீதம் வரையில் உயர்த்தியுள்ளது
Jun 16, 2022, 1:25 pm IST
ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் அதிகப்படியான எரிபொருள் விலை தாக்கத்தை ஈடு செய்ய கட்டணத்தை 15% உயர்த்தியது ஸ்பைஸ்ஜெட்
Jun 16, 2022, 11:46 am IST
சென்செக்ஸ் குறியீடு 245.17 புள்ளிகள் சரிந்து 52,296.22 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 16, 2022, 11:46 am IST
நிஃப்டி குறியீடு 87.05 புள்ளிகள் சரிந்து 15,605.10 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 16, 2022, 11:46 am IST
ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் மற்ரும் ஸ்ரீராம் கேப்பிடல் நிறுவனங்களை ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைக்க ஆர்பிஐ ஒப்புதல்
Jun 16, 2022, 11:45 am IST
மிகப்பெரிய NBFC நிறுவனத்தை உருவாக்க ஸ்ரீராம் குரூப் திட்டம்
Jun 16, 2022, 11:45 am IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் விலை 78.08 ஆக உள்ளது
Jun 16, 2022, 11:45 am IST
விமான எரிபொருள் விலை 16.3 சதவீதம் அதிகரிப்பு.
விமான எரிபொருள் ஒரு கிலோ லிட்டர் 1.41 லட்சம் ரூபாய் உயர்வு
Jun 16, 2022, 11:44 am IST
6 மாதத்தில் 91 சதவீதம் உயர்ந்தது விமான எரிபொருள் விலை
Jun 16, 2022, 11:44 am IST
விமான சேவை செலவுகளில் 40 சதவீதம் எரிபொருள் தான்
Jun 16, 2022, 11:44 am IST
ஸ்பைஸ்ஜெட், இண்டர்குளோப் பங்குகள் சரிவு
Jun 16, 2022, 11:44 am IST
கோடாக் மஹிந்திரா வங்கி தனது வட்டி விகிதத்தை 0.20 - 0.25 சதவீதம் அதிகரித்துள்ளது
Jun 16, 2022, 11:44 am IST
ஜேபி மோர்கன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டார்கெட் விலையை 23% உயர்த்தியது
Jun 16, 2022, 11:43 am IST
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டார்கெட் விலை 3,170 - ஜேபி மோர்கன்
Jun 16, 2022, 11:43 am IST
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 0.37 சதவீத உயர்வில் 2,605.85 ரூபாயாக உள்ளது
Jun 16, 2022, 11:43 am IST
ரூபாய் மதிப்பு இன்று 78.40 ரூபாய் வரையில் சரியலாம் - மோதிலால் ஆஸ்வால்
Jun 16, 2022, 11:43 am IST
சென்செக்ஸ் காலை வர்த்தகத்தில் 600 புள்ளிகள் வரையில் உயர்ந்தது
Jun 16, 2022, 11:43 am IST
கச்சா எண்ணெய் விலை 120 டாலருக்கு கீழ் சரிந்தது
Jun 16, 2022, 11:42 am IST
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை சரிவு
Jun 16, 2022, 11:42 am IST
அமெரிக்கா தனது பொருளாதார வளர்ச்சி அளவீட்டை குறைக்க முடிவு
Jun 16, 2022, 11:42 am IST
பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டியை 0.75 சதவீதம் அதிகரித்துள்ளது
Share This Article
English summary
Sensex nifty live updates 16 june 2022: fed rate hike fomc inr usd rupee dollar lic share price brent crude oil bitcoin gold covid
Sensex nifty live updates 16 june 2022: fed rate hike fomc inr usd rupee dollar lic share price brent crude oil bitcoin gold covid
Story first published: Thursday, June 16, 2022, 15:56 [IST]