1400 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. ரூ.5 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!
அமெரிக்காவில் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தியது, ஆனாலும் எரிபொருள் விலை உயர்வால் தொடர்ந்து விலைவாசி அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் புதன்கிழமை வர்த்தகத்தில் டாவ் ஜோன்ஸ், நாஸ்டாக், எஸ் அண்ட் பி குறியீடுகள் அதிகப்படியான சரிவைப் பதிவு செய்தது.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் முன்னணி ரீடைல் வர்த்தக நிறுவனமான Target Corp இன் எரிபொருள் விலை உயர்வாலும், செலவுகள் அதிகரிப்பாலும் 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் லாபம் பாதியாகக் குறைந்த நிலையில் இந்நிறுவன பங்குகள் 25.1% சரிந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்த அமெரிக்க ரீடைல் நிறுவனங்களும் அதிகளவிலான சரிவைப் பதிவு செய்தது.
அமெரிக்கச் சந்தை வீழ்ச்சியின் எதிரொலியாக வியாழக்கிழமை ஆசிய சந்தை மொத்தமும் சரிந்து மும்பை பங்குச்சந்தையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இன்றைய வர்த்தகம் துவங்கி 30 நிமிடத்தில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளை இழந்து 3 நாள் உயர்வை மொத்தமாக இழந்துவிட்டது.
May 19, 2022, 3:51 pm IST
சென்செக்ஸ் குறியீடு 1416.30 புள்ளிகள் உயர்ந்து 52,792.23 புள்ளிகளை எட்டியுள்ளது
May 19, 2022, 3:51 pm IST
நிஃப்டி குறியீடு 430.90 புள்ளிகள் உயர்ந்து 15,809.40 புள்ளிகளை எட்டியுள்ளது
May 19, 2022, 3:30 pm IST
ரஷ்ய விமான நிறுவனங்கள் மீது பிரிட்டன் புதிய தடை
May 19, 2022, 3:30 pm IST
பிரிட்டன் அரசு Aeroflot, Ural Airlines மற்றும் Rossiya Airlines மீது தடை விதித்துள்ளது.
May 19, 2022, 3:30 pm IST
இந்த மூன்று நிறுவனங்களுக்குச் சொந்தமான லேண்டிங் ஸ்லாட்-ஐ விற்பனை செய்யப் பிரிட்டன் அரசு முடிவு
May 19, 2022, 3:30 pm IST
18 காலாண்டில் அதிக லாபத்தைப் பதிவு செய்த பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி
May 19, 2022, 3:29 pm IST
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி பங்குகள் 1.97% உயர்வு
May 19, 2022, 3:29 pm IST
மார்ச் காலாண்டில் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி 346 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றது
May 19, 2022, 3:29 pm IST
டாடா குழுமத்திற்கு எதிராக சைரஸ் மிஸ்திரி தொடுத்த மேல் முறையீடு ரத்து செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட் உத்தரவு
May 19, 2022, 3:29 pm IST
சுப்ரீம் கோர்ட் உத்தரவை வரவேற்பதாக ரத்தன் டாடா டிவிட்டரில் பதிவு
May 19, 2022, 3:28 pm IST
சரிவில் இருந்து மீண்ட ஹீரோ மோட்டோ கார்ப்
May 19, 2022, 3:28 pm IST
இன்போசிஸ் பங்கு 6 சதவீதம் வரையில் சரிவு
May 19, 2022, 1:11 pm IST
சென்செக்ஸ் குறியீடு 1336.53 புள்ளிகள் சரிந்து 52,872 புள்ளிகளை எட்டியுள்ளது
May 19, 2022, 1:11 pm IST
நிஃப்டி குறியீடு 403.30 புள்ளிகள் சரிந்து 15,837.00 புள்ளிகளை எட்டியுள்ளது
May 19, 2022, 1:10 pm IST
விகார்டு நிறுவனத்தின் லாபம் 32.2% உயர்வு
May 19, 2022, 1:10 pm IST
மருந்து விற்பனை அமெரிக்காவில் 200 மில்லியன் டாலருக்கு மேல் தாண்டாது - லுபின்
May 19, 2022, 1:10 pm IST
மாருதி சுசூகி, சுசூகி மோட்டர் சைக்கிள் நிறுவனம் 800 ஏக்கர் நிலத்தை ஹரியானா மாநிலத்தில் பெற்றது
May 19, 2022, 1:10 pm IST
ஜிஎஸ்டி-யில் மாநில அரசுக்கு சரி சமமான உரிமை உண்டு - நீதிமன்றம்
May 19, 2022, 1:09 pm IST
மணப்புரம் பைனான்ஸ் பங்குகள் 10.47% சரிவு
May 19, 2022, 11:46 am IST
நிஃப்டி குறியீடு 15900 புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளது
May 19, 2022, 11:46 am IST
14.2 கிலோ சமையல் சிலிண்டர் விலை 3.5 ரூபாய் உயர்வு
May 19, 2022, 11:46 am IST
சென்செக்ஸ் குறியீடு 1200 புள்ளிகள் வரையில் சரிவு
May 19, 2022, 11:46 am IST
MEB எலக்ட்ரிக் உதிரிபாகங்களுக்காக வோக்ஸ்வேகன் மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா கூட்டணி ஒப்பந்தம்
May 19, 2022, 11:46 am IST
பிஎஸ்ஈ ஐடி குறியீடு 3 சதவீதம் வரையில் சரிவு
May 19, 2022, 11:45 am IST
பிர்லா டையர்ஸ் பங்குகள் 5 சதவீதம் வரையில் சரிவு
May 19, 2022, 10:38 am IST
சென்செக்ஸ் குறியீடு 963.07 புள்ளிகள் சரிந்து 53,245.46 புள்ளிகளை எட்டியுள்ளது
May 19, 2022, 10:38 am IST
நிஃப்டி குறியீடு 288.15 புள்ளிகள் சரிந்து 15,952.15 புள்ளிகளை எட்டியுள்ளது
May 19, 2022, 10:37 am IST
பேடிஎம் பங்குகள் 3.96% சரிவு
May 19, 2022, 10:37 am IST
நெஸ்லே இந்தியா பங்குகள் 52 வார சரிவை தொட்டது
May 19, 2022, 10:37 am IST
யெஸ் வங்கி பங்குகள் 3.24% சரிவு
May 19, 2022, 10:37 am IST
மணப்புரம் பைனான்ஸ் பங்குகள் 9.52 சதவீதம் சரிவு
May 19, 2022, 10:37 am IST
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்களில் ஐடிசி மட்டுமே உயர்வு
May 19, 2022, 10:36 am IST
ஐடிசி பங்குகள் காலாண்டு முடிவுகள் எதிரொலியாக உயர்வு
May 19, 2022, 10:36 am IST
ஹெச்டிஎப்சி வங்கி, ஹெச்டிஎப்சி ஏஎம்சி, பாரத் பெட்ரோலியம், நெஸ்லே, லுபின் ஆகியவை 52 வார சரிவை எட்டியுள்ளது
May 19, 2022, 10:35 am IST
ஐடிசி பங்குகள் 3 வருட உச்சத்தை தொட்டது
May 19, 2022, 10:35 am IST
சென்செக்ஸ் குறியீடு 1150 புள்ளிகள் வரையில் சரிந்தது
May 19, 2022, 10:34 am IST
S&P 500 ESG Index-ல் இருந்து டெஸ்லா நிறுவனம் நீக்கம்
May 19, 2022, 10:33 am IST
ஆசிய சந்தை மொத்தமும் சரிவு
Share This Article
English summary
Sensex nifty live updates 19 may 2022: itc godrej consumer tesla elon musk lic share price covid lockdown brent crude bitcoin gold rate
Sensex nifty live updates 19 may 2022: itc godrej consumer tesla elon musk lic share price covid lockdown brent crude bitcoin gold rate 1000 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. அமெரிக்கச் சந்தை சரிவின் எதிரொலி..!
Story first published: Thursday, May 19, 2022, 15:54 [IST]