214 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. கைகொடுத்த ஐடி பங்குகள்..!
இந்திய ரிசர்வ் வங்கி நிர்வாகப் பணிகள் காரணமாக, ஆகஸ்ட் 2-4 ஆம் தேதி நடக்க வேண்டிய இருமாத நாணய கொள்கை கூட்டம் ஆகஸ்ட் 3-5 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று துவங்கப்பட்டது. ஆர்பிஐ-யின் ரெப்போ விகித முடிவுகளுக்காகப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் காத்திருக்கும் நிலையில் இன்று மந்தமான வர்த்தகம் மும்பை பங்குச்சந்தையில் பதிவாகியுள்ளது.
இன்று காலை வர்த்தகத்தில் மெட்டல், எனர்ஜி மற்றும் ஐடி துறை பங்குகள் அதிகப்படியான முதலீட்டைப் பெற்று உயர்வுடன் காணப்பட்டாலும் சென்செக்ஸ் 350 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது.
சோமேட்டோ பங்குகள் நேற்று 20 சதவீதம் வரையில் உயர்ந்த நிலையில் பலக் டீல் வாயிலாக 300 மில்லியன் டாலருக்கும் அதிக மதிப்புடைய பங்குகளை விற்பனை செய்யப்படும் காரணத்தால் சோமேட்டோ பங்குகள் 2.52 சதவீதம் சரிந்து 54.20 ரூபாயாக உள்ளது.
Aug 03, 2022, 3:45 pm IST
சென்செக்ஸ் குறியீடு 214.17 புள்ளிகள் உயர்ந்து 58,350.53 புள்ளிகளை எட்டியுள்ளது
Aug 03, 2022, 3:45 pm IST
நிஃப்டி குறியீடு 42.70 புள்ளிகள் உயர்ந்து 17,388.15 புள்ளிகளை எட்டியுள்ளது
Aug 03, 2022, 3:44 pm IST
ஐடி பங்குகள் அதிகளவிலான முதலீட்டை பெற்றுள்ளது
Aug 03, 2022, 3:44 pm IST
ஐடி பங்குகள் தொடர்ந்து சரிந்த நிலையில் சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளது
Aug 03, 2022, 3:44 pm IST
ரூபாய் மதிப்பு 79.16 ஆக சரிவு
Aug 03, 2022, 3:13 pm IST
பிஎஸ்ஈ ஸ்மால்கேப் பங்குகள் 100 புள்ளிகள் சரிவு
Aug 03, 2022, 3:13 pm IST
விரைவில் சோமேட்டோ லாபகரமான நிறுவனமாக மாறும் - தீபிந்தர் கோயல்
Aug 03, 2022, 3:13 pm IST
டாடா பவர் நிறுவனம் ராஜஸ்தானில் 225 மெகாவாட் ஹைப்ரிட் பவர் திட்டத்தை செயல்படுத்துகிறது
Aug 03, 2022, 3:13 pm IST
NTPC நிறுவனத்தின் 200 மெகாவாட் காற்றாலை திட்டத்தை ஐநாக்ஸ் விண்ட் கைப்பற்றியுள்ளது
Aug 03, 2022, 3:13 pm IST
இன்டஸ் டவர்ஸ் பங்குகள் 7 சதவீதம் வரையில் சரிந்துள்ளது
Aug 03, 2022, 3:12 pm IST
வைபவ் குளோபல் பங்குகள் 6.11 சதவீதம் வரைவில் சரிந்துள்ளது
Aug 03, 2022, 3:12 pm IST
சீமென்ஸ் பங்குகள் 5 சதவீதம் வரையில் சரிந்துள்ளது
Aug 03, 2022, 3:12 pm IST
பலராம்பூரி சீனி மில்ஸ் 4.83 சதவீதம் வரையில் சரிவு
Aug 03, 2022, 1:41 pm IST
லாபத்தில் 16 சதவீதம் காட்ரிஜ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ஸ் சரிவு
Aug 03, 2022, 1:41 pm IST
சன் பார்மா சேர்மன் Israel Makov ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் தனது பதவியில் ஓய்வு பெறுகிறார்
Aug 03, 2022, 1:41 pm IST
சிட்டி கேஸ் விநியோக நிறுவனமான மாகநகர் கேஸ் லிமிடெட் 2வது முறையாக எரிவாயு விலையை அதிகரித்துள்ளது
Aug 03, 2022, 1:41 pm IST
சிஎன்ஜி ஒரு கிலோவிற்கு 6 ரூபாயும், பைப் இயற்கை எரிவாயு-வுக்கு ஒரு யூனிட் 4 ரூபாயும் அதிகரித்துள்ளது
Aug 03, 2022, 1:41 pm IST
குஜராத் பிப்பாவ் துறைமுகம் லாபத்தில் 81 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது
Aug 03, 2022, 1:40 pm IST
தேவ்யானி இண்டர்நேஷ்னஸல் லாபம் 33.4 கோடி ரூபாயில் இருந்து 74.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது
Aug 03, 2022, 1:40 pm IST
நிஃப்டி FMCG குறியீடு 1 சதவீதத்திற்கு மேல் சரிவு
Aug 03, 2022, 12:05 pm IST
சென்செக்ஸ் குறியீடு 235.98 புள்ளிகள் சரிந்து 57,900.38 புள்ளிகளை எட்டியுள்ளது
Aug 03, 2022, 12:05 pm IST
நிஃப்டி குறியீடு 94.40 புள்ளிகள் சரிந்து 17,251.05 புள்ளிகளை எட்டியுள்ளது
Aug 03, 2022, 12:05 pm IST
கரும்பு-க்கான நியாய விலை குவின்டாலுக்கு 15 ரூபாய் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
Aug 03, 2022, 12:05 pm IST
இந்தியாவின் காம்போசிட் PMI குறியீடு 56.6 புள்ளிகளாக குறைந்துள்ளது
Aug 03, 2022, 12:04 pm IST
சர்வீசஸ் PMI குறியீடு 59.2 புள்ளிகளாக குறைந்துள்ளது
Aug 03, 2022, 12:04 pm IST
வலிமை பெறும் ரூபாய் மதிப்பு
Aug 03, 2022, 12:04 pm IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 78.68 ஆக உயர்ந்துள்ளது
Aug 03, 2022, 12:04 pm IST
பிராமல் கேப்பிடல் 4,451 கோடி ரூபாய் மதிப்பிலான வாராக் கடனை மிகப்பெரிய தள்ளுபடியில் விற்பனை செய்துள்ளது
Aug 03, 2022, 12:04 pm IST
ஸ்பைஸ்ஜெட் பங்குகள் 7 சதவீதம் வரையில் உயர்வு
Aug 03, 2022, 12:03 pm IST
Subex நிறுவன பங்குகள் 20 சதவீதம் அப்பர் சர்கியூட் அளவீட்டை தொட்டு உள்ளது
Share This Article
English summary
sensex nifty live updates on 03 august 2022: IT shines; Auto, Metal drag zomato indigo vodafone
sensex nifty live updates on 03 august 2022: IT shines; Auto, Metal drag zomato indigo vodafone சென்செக்ஸ் குறியீடு 350 புள்ளிகள் சரிவு.. தடுமாறும் சோமேட்டோ பங்குகள்..!
Story first published: Wednesday, August 3, 2022, 15:45 [IST]