வெறும் 20 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. ஐடி பங்குகள் பெரும் சரிவு..!
அமெரிக்காவின் உற்பத்தி துறை மந்தமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்த நிலைக்கு அடையும் அச்சம் உருவாகியுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் வேலைவாய்ப்புச் சந்தையில் அதிகப்படியான பிரச்சனைகள் இருக்கும் நிலையில், தற்போது உற்பத்தி குறைந்துள்ளது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் எதிரொலியாக இன்று ஆசிய சந்தையில் மந்தமான வர்த்தகம் பதிவான நிலையில் மும்பை பங்குச்சந்தை 4 நாள் தொடர் உயர்வில் இருந்து வெளியேறி, இன்று சரிவை சந்தித்துள்ளது.
இன்று அதானி கிரீன் எனர்ஜி, சீமென்ஸ், இன்டஸ் டவர்ஸ், Bosch, காட்ரிஜ் ப்ராபெர்டீஸ், டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ், வோல்டாஸ், தீபக் நைட்ரேட், தெர்மேக்ஸ், பேங்க் ஆப் இந்தியா, ஷீலா ஃபோம், பிரிகேட் எண்டர்பிரைசர்ஸ், சரிகமா இந்தியா, ஷியாம் மெட்டாலிங்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இன்று காலாண்டு முடிவுகளை வெளியிடுகிறது.
Aug 02, 2022, 4:30 pm IST
சென்செக்ஸ் குறியீடு 20.86 புள்ளிகள் உயர்ந்து 58,136.36 புள்ளிகளை எட்டியுள்ளது
Aug 02, 2022, 4:29 pm IST
வெறும் 20 புள்ளிகள் உயர்ந்தாலும் 5வது நாளாக தொடர்ந்து வளர்ச்சி பாதையில் உள்ளது மும்பை பங்குச்சந்தை
Aug 02, 2022, 4:29 pm IST
IDFC AMC பிரிவை IDFC-யில் இருந்து தனியாகப் பிரிக்க CCI ஒப்புதல்
Aug 02, 2022, 4:29 pm IST
52 சதவீத லாப உயர்வைப் பதிவு செய்த Saregama India
Aug 02, 2022, 4:29 pm IST
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 78.71 ஆக உள்ளது
Aug 02, 2022, 4:29 pm IST
4 மாத உயர்வில் நிஃப்டி
Aug 02, 2022, 4:29 pm IST
ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் 1 சதவீதம் சரிவு
Aug 02, 2022, 3:20 pm IST
சென்செக்ஸ் குறியீடு 114.81 புள்ளிகள் உயர்ந்து 58,230.31 புள்ளிகளை எட்டியுள்ளது
Aug 02, 2022, 3:20 pm IST
நிஃப்டி குறியீடு 23.70 புள்ளிகள் உயர்ந்து 17,363.75 புள்ளிகளை எட்டியுள்ளது
Aug 02, 2022, 3:20 pm IST
நிஃப்டி பார்மா குறியீடு 2.15 சதவீதம் சரிவு
Aug 02, 2022, 3:20 pm IST
Godrej Properties நிறுவனத்தின் சிஇஓ மோஹித் மல்ஹோத்ரா ராஜினாமா
Aug 02, 2022, 3:19 pm IST
பிஎஸ்ஈ ஸ்மால்கேப் குறியீடு 100 புள்ளிகள் வரையில் உயர்வு
Aug 02, 2022, 3:19 pm IST
CCI அமைப்பு ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனத்திற்கு தனது கிளை நிறுவனங்களை இணைக்க ஒப்புதல் அளித்தது
Aug 02, 2022, 3:19 pm IST
ஜூலை மாதம் NMDC சுமார் 2.05 மில்லியன் டன் இரும்பு தாது-வை உற்பத்தி செய்தது
Aug 02, 2022, 3:19 pm IST
திருவேனி டர்பைன் பங்குகள் இன்று 14 சதவீதம் வரையில் உயர்வு
Aug 02, 2022, 3:18 pm IST
UPL பங்குகள் 5 சதவீதம் வரையில் சரிவு
Aug 02, 2022, 1:33 pm IST
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 78.5 ஆக உள்ளது
Aug 02, 2022, 1:33 pm IST
பிஎஸ்ஈ மிட்கேப் குறியீடு 100 புள்ளிகள் உயர்வு
Aug 02, 2022, 1:33 pm IST
பெயிண்ட் நிறுவனங்கள் அனைத்தும் உயர்வு
Aug 02, 2022, 1:33 pm IST
கார்லைல் சார்பாக யெஸ் வங்கி நிர்வாக குழுவில் HDFC வங்கியின் முன்னாள் தலைவரான ஆதித்யா பூரி அமர்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது
Aug 02, 2022, 1:32 pm IST
சோமேட்டோ பங்குகள் சுமார் 18 சதவீதம் உயர்வு
Aug 02, 2022, 1:32 pm IST
ஜூன் காலாண்டு முடிவுகள் சோமேட்டோ பங்குகளில் மேஜிக் செய்துள்ளது
Aug 02, 2022, 1:32 pm IST
31.23 டன் கார்கோ-வை அதானி போர்ட்ஸ் ஜூலை மாதத்தில் நிர்வாகம் செய்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 13 சதவீதம் அதிகமாகும்
Aug 02, 2022, 1:32 pm IST
சிமெண்ட் பங்குகள் சரிவு
Aug 02, 2022, 11:42 am IST
நிஃப்டி ரியல் எஸ்டேட் குறியீடு 1 சதவீதம் சரிவு
Aug 02, 2022, 11:42 am IST
இந்தியாபுல்ஸ், DLF, காட்ரிஜ், Prestige Estates நிறுவனங்கள் 2.3 சதவீதம் வரையில் சரிவு
Aug 02, 2022, 11:42 am IST
ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டம் ஆகஸ்ட் 3-5 தேதி நடக்க உள்ளது
Aug 02, 2022, 11:41 am IST
இக்கூட்டத்தில் கட்டாயம் வட்டி உயர்வு இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது
Aug 02, 2022, 11:41 am IST
SKS பவர் நிறுவனத்தைக் கைப்பற்றும் போட்டியில் ரிலையன்ஸ இண்டஸ்ட்ரீஸ், அதானி பவர் போட்டி
Aug 02, 2022, 11:41 am IST
பெட்ரோலியம் மற்றும் கேஸ் நிறுவன பங்குகள் உயர்வு
Aug 02, 2022, 11:41 am IST
பஞ்சாப் & சிந்து வங்கி ஜூன் காலாண்டில் லாபத்தில் 18 சதவீத உயர்வைப் பதிவு செய்து 205 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது
Aug 02, 2022, 11:41 am IST
நிஃப்டி ஐடி குறியீடு சரிவு
Aug 02, 2022, 10:29 am IST
சென்செக்ஸ் குறியீடு 267.19 புள்ளிகள் சரிந்து 57,848.31 புள்ளிகளை எட்டியுள்ளது
Aug 02, 2022, 10:29 am IST
நிஃப்டி குறியீடு 83.60 புள்ளிகள் சரிந்து 17,256.45 புள்ளிகளை எட்டியுள்ளது
Aug 02, 2022, 10:29 am IST
இந்தியாவின் 10 ஆண்டு பத்திர லாபத்தின் அளவு 7.18 சதவீதமாக உள்ளது
Aug 02, 2022, 10:29 am IST
7.18 சதவீதம் என்பது மே 4ஆம் தேதி விட குறைவானது
Aug 02, 2022, 10:28 am IST
கன்சாய் நெரோலேக் பெயிண்ட்ஸ் நிறுவன பங்குகள் 13 சதவீதம் வரையில் உயர்வு
Aug 02, 2022, 10:28 am IST
AAI-க்கான அனைத்து நிலுவை தொகையை ஸ்பைஸ்ஜெட் தீர்த்தது
Aug 02, 2022, 10:28 am IST
ஸ்பைஸ்ஜெட் பங்குகள் 2.61 சதவீதம் வரையில் உயர்வு
Aug 02, 2022, 10:28 am IST
நிஃப்டி மெட்டல் குறியீடு 1 சதவீதம் வரையில் சரிவு
Aug 02, 2022, 10:28 am IST
சோமேட்டோ பங்குகள் காலாண்டு முடிவுகளுக்குப் பின்பு 7 சதவீதம் உயர்ந்துள்ளது
Aug 02, 2022, 10:28 am IST
ஐடிசி ஜூன் காலாண்டில் 33.46 சதவீத லாப வளர்ச்சியை பதிவு செய்துள்ளது
Aug 02, 2022, 10:27 am IST
அமெரிக்காவின் நீண்ட கால கருவூல பத்திரங்கள் 4 மாத சரிவை எட்டியுள்ளது
Aug 02, 2022, 10:27 am IST
இதன் எதிரொலியாக அமெரிக்க டாலருக்கு எதிரான மதிப்பு சரிந்தது
Aug 02, 2022, 10:27 am IST
அமெரிக்காவின் உற்பத்தி துறை தரவுகள் மந்தமான வளர்ச்சியை பதிவு செய்த நிலையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது
Aug 02, 2022, 10:20 am IST
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 78.95 ரூபாயாக துவங்கியுள்ளது
Aug 02, 2022, 10:20 am IST
திங்கட்கிழமை வர்த்தக முடிவில் 79.02 ஆக இருந்தது
Aug 02, 2022, 10:20 am IST
பிரெண்ட் கச்சா எண்ணெய் 99 டாலராக சரிந்துள்ளது
Aug 02, 2022, 10:20 am IST
அமெரிக்காவின் உற்பத்தி துறை சரிவு
Aug 02, 2022, 10:20 am IST
ஆசிய பங்குகள் மொத்தமும் இன்று காலை சரிவுடன் துவங்கியுள்ளது
Aug 02, 2022, 10:19 am IST
அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகள் 2020-க்கு பின் மோசமான மாதாந்திர சரிவை பதிவு செய்துள்ளது
Share This Article
English summary
sensex nifty live updates today 02 august 2022: slowing US manufacturing sector itc zomato adani green
sensex nifty live updates today 02 august 2022: slowing US manufacturing sector itc zomato adani green சென்செக்ஸ்: ஆரம்பமே 150 புள்ளிகள் சரிவு.. என்ன காரணம்..?
Story first published: Tuesday, August 2, 2022, 16:31 [IST]