427 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. சரிவில் இருந்து மீளாத ரிலையன்ஸ்..!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவின் மூலம் பணவீக்கம் சரியும் நிலை உருவாகியுள்ளதால் சர்வதேச முதலீட்டு சந்தையில் முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய வேகம் வந்துள்ளது.

இதன் வெளிப்பாடாக வியாழக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு காலை வர்த்தகம் துவங்கும் போதே உயர்வுடன் துவங்கியது. இன்று 3வது நாளாக பிரெண்ட் கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் சரிவை சந்தித்துள்ளது.

இன்றைய காலை வர்த்தகத்தில் டைட்டன் நிறுவனத்தின் சிறப்பான காலாண்டு முடிவுகளின் எதிரொலியால் டைட்டன் பங்குகள் 7 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

அந்நியச் செலாவணி வரவை அதிகரிக்க இந்திய மத்திய வங்கி புதன்கிழமை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குறுகிய கால கார்ப்பரேட் கடன் பத்திரங்களை வாங்க அனுமதிப்பது மற்றும் முழுமையாக அணுகக்கூடிய வழியில் அதிகமான அரசுப் பத்திரங்களை விற்பனை செய்வது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்தது.

புதன்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட பெடரல் ரிசர்வின் முடிவுகளில் அதன் ஜூன் கூட்டத்தில் ஒரு பெரிய வட்டி உயர்வைச் செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவிக்க அறிவிப்புகள் சர்வதேச சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

427 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. சரிவில் இருந்து மீளாத ரிலையன்ஸ்..!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+