30 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. தப்பித்தது ரிலையன்ஸ்..!
ஐஎம்எப் உட்பட பல சர்வதேச நிதி அமைப்புகள் ரெசிஷன் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வரும் வேளையில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு மூலம் ஏற்பட்டு உள்ள விலை மாற்றம் சர்வதேச சந்தையை கடுமையாக பாதித்துள்ளது.
அமெரிக்க பங்குச்சந்தை சரிவை தொடர்ந்து வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் பெரும்பாலான வர்த்தக சந்தையில் சரிவு ஏற்பட்ட காரணத்தால் மும்பை பங்குச்சந்தையிலும் இதன் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. இதன் எதிரொலியாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் துவங்கியுள்ளது.
இதேவேளையில் அன்னிய முதலீடுகள் வெளியேற்றத்தால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 82.33 என்ற புதிய வரலாற்று சரிவை பதிவு செய்துள்ளது.
Oct 07, 2022, 4:08 pm IST
சென்செக்ஸ் குறியீடு 30.81 புள்ளிகள் உயர்ந்து 58,191.29 புள்ளிகளை எட்டியுள்ளது
Oct 07, 2022, 4:08 pm IST
நிஃப்டி குறியீடு 17.15 புள்ளிகள் உயர்ந்து 17,314.65 புள்ளிகளை எட்டியுள்ளது
Oct 07, 2022, 4:08 pm IST
சோமேட்டோ பங்குகள் 6 சதவீதம் உயர்வு
Oct 07, 2022, 4:07 pm IST
டைட்டன் பங்குகள் 5 சதவீதம் உயர்வு
Oct 07, 2022, 4:07 pm IST
காஃபி டே எண்டர்பிரைசர்ஸ் செப்டம்பர் காலாண்டில் சுமார் 465.66 கோடி ரூபாய் அளவிலான கடன் மற்றும் வட்டியை செலுத்த முடியாமல் உள்ளது
Oct 07, 2022, 4:07 pm IST
10 கிராம் தங்கம் விலை 37 ரூபாய் உயர்ந்து 52,300 ரூபாயாக உள்ளது
Oct 07, 2022, 4:07 pm IST
1 கிலோ வெள்ளி விலை 311 ரூபாய் உய்ர்ந்து 62,022 ரூபாயார உள்ளது
Oct 07, 2022, 4:06 pm IST
ஹீரோ மோட்டோ VIDA V1 என்னும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது
Oct 07, 2022, 2:31 pm IST
கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள் 5 சதவீதம் உயர்வு
Oct 07, 2022, 2:30 pm IST
NTPC மற்றும் GE கேஸ் பவர் நிறுவனம் ஹைட்ரஜென் கேஸ் டர்பைன் திட்டத்திற்கு MOU கையெழுத்து
Oct 07, 2022, 2:30 pm IST
STOXX 600 குறியீடு சரிவு
Oct 07, 2022, 2:30 pm IST
வெளிநாட்டு கார்களுக்கான இறக்குமதி வரியை 30 சதவீதம் குறைக்க இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கோரிக்கை
Oct 07, 2022, 2:30 pm IST
பயோகான் பங்குகள் சரிவு
Oct 07, 2022, 2:30 pm IST
பயோகான் நிறுவனத்தின் பெங்களூரு தொழிற்சாலையில் பெரிய பிரச்சனையை ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் கண்டுப்பிடித்துள்ளது
Oct 07, 2022, 2:29 pm IST
டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதாக அறிவித்த நாள் முதல் டெஸ்லா பங்குகள் 30 சதவீதம் சரிவு
Oct 07, 2022, 12:17 pm IST
எஸ்பிஐ கார்ட்ஸ் அண்ட் பேமெண்ட் சர்வீசஸ் நிறுவனத்திற்கு தலைமை நிதியியல் அதிகாரியாக ரஷ்மி மொகந்தி தேர்வு
Oct 07, 2022, 12:17 pm IST
ரூபாய் மதிப்பு சரிவால் டாலரை விற்பனை செய்யும் ஆர்பிஐ
Oct 07, 2022, 12:17 pm IST
300 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்
Oct 07, 2022, 12:16 pm IST
இன்று முதல் அனைத்து ப்ரோகரேஜ் அமைப்புகளும் பயன்படுத்தாத வாடிக்கையாளர் பணத்தை திரும்ப அவர்களது கணக்கிற்கே செலுத்த வேண்டும் - செபி புதிய உத்தரவு
Oct 07, 2022, 12:16 pm IST
varroc இன்ஜினியரிங் பங்குகள் 9 சதவீதம் சரிவு
Oct 07, 2022, 12:16 pm IST
இந்தியன் ஹீயும் பைப் பங்குகள் 14 சதவீதம் உயர்வு
Oct 07, 2022, 12:16 pm IST
அஜ்மெரா ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் செப்டம்பர் வர்த்தகம் 82% உயர்வு
Oct 07, 2022, 12:16 pm IST
வங்கி பங்குகள் தொடர் சரிவு
Oct 07, 2022, 12:16 pm IST
பாங்க் ஆப் பரோடா பங்குகள் 3 சதவீதம் சரிவு
Oct 07, 2022, 12:15 pm IST
இந்திய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் ZEBPAY சிங்கப்பூரில் வர்த்தகத்தை துவங்க லைசென்ஸ் பெற விண்ணப்பம் கோரியுள்ளது
Oct 07, 2022, 12:15 pm IST
2022-க்குள் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 104 டாலர் வரை உயரும் - ஜேபி மோர்கன்
Oct 07, 2022, 12:15 pm IST
RattanIndia Enterprises நிறுவனம் REVOLT என்னும் எலக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனத்தில் 33.84 சதவீத பங்குகளை வாங்குகிறது
Oct 07, 2022, 12:15 pm IST
RattanIndia பங்குகள் 10 சதவீதம் வரையில் உயர்வு
Oct 07, 2022, 10:03 am IST
சென்செக்ஸ் குறியீடு 48.6 புள்ளிகள் சரிவில் 58,173.50 புள்ளிகளை எட்டியுள்ளது
Oct 07, 2022, 10:03 am IST
நிஃப்டி குறியீடு 6.40 புள்ளிகள் சரிவில் 17,325.40 புள்ளிகளை எட்டியுள்ளது
Oct 07, 2022, 10:03 am IST
முகேஷ் அம்பானி குடும்ப அலுவலகத்தைச் சிங்கப்பூரில் அமைக்க உள்ளார்
Oct 07, 2022, 10:03 am IST
பணவீக்கம் அதிகரிப்பால் லாபம் சரியும் - டாபர் அறிவிப்பு
Oct 07, 2022, 10:02 am IST
200 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்
Oct 07, 2022, 10:02 am IST
வரலாற்றுச் சரிவில் ரூபாய் மதிப்பு
Oct 07, 2022, 10:02 am IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 82.33 ஆக சரிவு
Oct 07, 2022, 10:02 am IST
அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகளைத் தொடர்ந்து கூடுதலான வட்டி உயர்வு தேவை என அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Oct 07, 2022, 10:02 am IST
ஆசிய பங்குச்சந்தை மொத்தமும் சரிவு
Oct 07, 2022, 10:02 am IST
3வது நாளாக சரிவு பாதையில் ஆசிய பங்குச்சந்தை
Oct 07, 2022, 10:02 am IST
டோக்கியோ பங்குச்சந்தை பெடரல் ரிசர்வ் அதிகாரிகளின் அறிவிப்பால் ஆரம்பமே தடுமாற்றத்துடன் துவங்கியது
Oct 07, 2022, 10:01 am IST
OPEC+ அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை உயர துவங்கியது
Oct 07, 2022, 10:01 am IST
ரூபாய் மதிப்பு காலை வர்த்தகத்திலேயே 55 பைசா சரிவு
Share This Article
English summary
sensex nifty live updates today 2022 October 07: USD rupee historic fall wall street dalal street bharti airtel titan sbi card
sensex nifty live updates today 2022 October 07: USD rupee historic fall wall street dalal street bharti airtel titan sbi card
Story first published: Friday, October 7, 2022, 16:09 [IST]