உள்நாட்டு முதலீட்டாளர்களின் குறைவான முதலீட்டின் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை மந்தமான வர்த்தகச் சூழ்நிலை உருவானது, ஆனால் வர்த்தகம் துவங்கி ஒரு மணிநேரத்திற்குப் பின்பு சென்செக்ஸ் குறியீடு லாபகரமான நிலைக்கு உயர்ந்தது.
முக்கியத் துறை
இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்யவில்லை எனினும், அதிகளவிலான முதலீடு எப்எம்ஜிசி, டெலிகாம், ஐடி, நகர்வோர், மெட்டல் பிரிவில் இருக்கும் நிறுவனங்கள் மீது அதிகளவிலான முதலீட்டைச் செய்தது.
19 புள்ளிகள்
ஐரோப்பிய சந்தை துவக்கத்தில் உயர்ந்த மும்பை பங்குச்சந்தை, வர்த்தக முடிவில் மளமளவெனச் சரிய துவங்கியது. இதன் காரணமாக வர்த்தக முடிவில் வெறும் 19 புள்ளிகள் மட்டுமே உயர்ந்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 19.69 புள்ளிகள் உயர்ந்து 35,490.04 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு வெறும் 6.70 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 10,769.15 புள்ளிகளை அடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில், கோல் இந்தியா, டிசிஎஸ், மாருதி, ஏசியன் பெயிண்ட்ஸ், பார்தி ஏர்டெல், எச்டிஎப்சி ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்தது. அதேபோல் டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் அதிகளவிலான சரிவை சந்தித்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications