வரலாறு காணாத உயர்வில் சென்செக்ஸ், நிஃப்டி.. உபி மக்களுக்கு நன்றி சொல்லும் முதலீட்டாளர்கள்..!
உத்தரபிரதேசத்தில் பாஜகவின் வெற்றிக்குப் பின் ஹோலி பண்டிகைக்காகத் திங்கட்கிழமை மும்பை பங்குச்சந்தை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியுடன் கூடிய மகிழ்ச்சியை அளித்து.
இன்றைய வர்த்தகம் துவக்கமே 600 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்தனர்.
வரலாறு காணாத உயர்வு..
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 496.40 புள்ளிகள் வரை உயர்ந்து, 29,442.63 புள்ளிகள் என்ற வரலாறு காணாத உயர்வை அடைந்தது. இதனுடன் நிஃப்டி குறியீடும் 152.45 புள்ளிகள் உயர்ந்து 9,087.00 புள்ளிகள் அடைந்து நிஃப்டி குறியீடும் புதிய உயரத்தை அடைந்தது.
ஐசிஐசிஐ
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி அதிகப்படியாக 5.99 சதவீதம் வரை உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து ஹிந்துஸ்தான் யூனிலீவர், எல் அண்ட் டி, எச்டிஎப்சி, சான் பார்மா, ஏசியன் பெயின்ட்ஸ் ஆகியவை அதிகளவிலான உயர்வை அடைந்தது.
பஜாஜ் ஆட்டோ
ஆனால் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் பஜாஜ் ஆட்டோ, கெயில், கோல் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் சரிவு அடைந்தது.
பணவீக்கம்
மத்திய அரசு செவ்வாய்க்கிழமை மாலையில், நுகர்வோர் பணவீக்கம், மொத்த பணவீக்கம் குறித்த தரவுகளை இன்று மாலை அறிவிக்க உள்ள நிலையில், நாளைய வர்த்தகத்தில் சிறிய அளவிலான சரிவு ஏற்படும் எனச் சந்தை வல்லுனர்கள் கணித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications