திங்கட்கிழமை பங்குச்சந்தை வர்த்தகம் முழுவதும் குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை அடிப்படையாகவே அமைந்தது என்று கூறினால் மிகையாகாது. குறிப்பாகக் குஜராத்தில் பிஜேபி கட்சியின் வெற்றி வாய்ப்புகளின் தாக்கம் அதிகமாகவே இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
3.30 மணிவரையில் குஜராத்தில் பிஜேபி கட்சியின் வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் சரிவில் இருந்து உயர்ந்த மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு லாபகரமான நிலையிலேயே வர்த்தகம் செய்து வருகிறது.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் 660 புள்ளிகள் வரையில் சரிந்து துவங்கிய மும்பை பங்குச்சந்தை, வாக்கு எண்ணிக்கையில் பிஜேபி ஆதிக்கம் செலுத்த துவங்கிய பின்பு உயர்வை அடைந்தது.
உள்நாட்டு முதலீட்டாளர்கள்
இன்றைய வர்த்தகத்தில் பிஜேபி கட்சியின் வெற்றியைக் கருத்தில் கொண்டு உள்நாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்த காரணத்தால் தொடர்ந்து லாபகரமான நிலையிலேயே இருந்தது.
ஐரோப்பிய சந்தை துவங்கிய பின்பு முதலீட்டு அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கணிசமான முதலீடுகள் குறைந்தது. இதே காலக்கட்டத்தில் குஜராத் வாக்கு எண்ணிக்கையில் பிஜேபியின் ஆதிக்கம் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸ்
வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 138.71 புள்ளிகள் உயர்ந்து 33,601.68 இன்றைய வர்த்தகத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று சரிவில் துவங்கி உயர்வான நிலையை அடைந்தது.
திங்கட்கிழமை வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 55.50 புள்ளிகள் உயர்ந்து 10,388.75 புள்ளிகளை அடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் மஹிந்திரா, எஸ்பிஐ, சன் பார்மா, ஐசிஐசிஐ வங்கி, மாருதி சுசூகி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்தது.


Click it and Unblock the Notifications