அமெரிக்கப் பெடரல் வங்கியின் இருமாத நாணய கொள்கை கூட்டம் இன்று முடிவடையும் நிலையில் வட்டி உயர்வு குறித்து எவ்விதமான அறிவிப்புகள் இருக்காது எனச் செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் அன்னிய முதலீட்டின் அளவுகள் கணிசமாக உயர்ந்தது.
முக்கியத் துறைகள்
இன்றைய வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் டெலிகாம், வங்கித்துறை சார்ந்த பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்த காரணத்தால் இன்று இத்துறை பங்குகள் அதிகளவிலான உயர்வைச் சந்தித்தது.
மும்பை பங்குச்சந்தை
செவ்வாய்க்கிழமை வர்த்தகம் மந்தமான இருந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை காலை முதல் நிலையான வர்த்தக உயர்வை அடைந்து வந்தது.
மதிய வர்த்தகத்தில் குறைவான முதலீடு மற்றும் வர்த்தகத்தின் காரணமாகச் சென்செக்ஸ் கணிசமான அளவில் சரிவை சந்தித்தது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 139.42 புள்ளிகள் வரையில் உயர்ந்து 33,136.18 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போல நிஃப்டி குறியீடும் உயர்வுடனே முடிந்தது, இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு 30.90 புள்ளிகள் உயர்ந்து 10,155.25 புள்ளிகளை அடைந்தது.


Click it and Unblock the Notifications