4 நாள் தொடர் சரிவில் சென்செக்ஸ்.. என்ன பிரச்சனை..?
அமெரிக்கச் சந்தை, ஆசிய சந்தையில் நிலவும் மோசமான வர்த்தக நிலையில் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் கடந்த ஒரு வாரக் காலமாகத் தொடர் சரிவை அடைந்து வருகிறது.
மோடியின் அறிவிப்பு மற்றும் அமெரிக்க அதிபர் தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் மும்பை பங்குச்சந்தை கணிசமான உயர்வை சில நாட்களில் பெற்றாலும் பெரும்பாலான நாட்களில் சரிவை மட்டுமே அடைந்துள்ளது.
வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 77.38 புள்ளிகள் சரிந்து 26,150.24 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 5.85 புள்ளிகள் சரிந்து 8,074.10 புள்ளிகளை எட்டி இந்த வாரத்தின் வர்த்தகம் முடிவடைந்துள்ளது.



Click it and Unblock the Notifications