இந்த வருடத்திலேயே தொடர்ந்து 7 நாட்கள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தொடர்ந்து உயர்ந்துள்ளது இதுதான் முறை, மேலும் இன்றைய வர்த்தகத்தின் உயர்விற்கு முக்கியக் காரணமாக நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் தனது 4வது காலாண்டு முடிவுகளையும், வருடாந்திர அறிக்கையும் வெளியிடும் காரணத்தால் முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்துள்ளனர்.

அதுமட்டும் அல்லாமல் இந்த வருடத்தின் 4வது காலாண்டு முடிவுகளை வெளியீடும் முதல் நிறுவனமாக இன்போசிஸ் திகழ்கிறது. இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதல் சென்செக்ஸ் உயர்வான நிலையில் இருந்தாலும் ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் சரிவை சந்தித்துள்ளது.
இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 91.52 புள்ளிகள் உயர்ந்து, 34,192.65 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 21.95 புள்ளிகள் உயர்வில் 10,480.60 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் அதானி போர்ட்ஸ், விப்ரோ, கோட்டாக் மஹிந்திரா, கோல் இந்தியா, டாக்டர் ரெட்டி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications