6 நாள் தொடர் சரிவில் இருந்து 220 புள்ளிகள் வரை உயர்ந்தது மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு.
மத்திய அரசின் 500 மற்றும் 1000 ரூபாய் புழக்கம் மீதான தடை மற்றும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்குப் பின் மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது.
கடந்த 6 நாட்களாகத் தொடர்ந்து சரிவு பாதையில் இருந்து வந்த மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று முதலீட்டில் கணிசமான உயர்வு காரணமாக 220 புள்ளிகள் வரை உயர்ந்தது.
இதுகுறித்துச் சந்தை வல்லுனர்கள் கூறுகையில், இன்றைய உயர்வு ஒரு தற்காலிகமானது, ஜனவரி 20ஆம் தேதிக்குப் பின் தான் பங்குச்சந்தை நிலையான வர்த்தகத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிகளில் 500 மற்றும் 1000 ரூபாய் மாற்றுவதற்குக் கடைசி நாள் டிசம்பர் 30, அதேபோல் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் அதிபராகப் பதவியேற்கிறார். இதனால் 2017ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி வரை மும்பை பங்குச்சந்தையின் தினசரி வர்த்தகம் ஏற்ற இறக்கத்துடனே காணப்படும்.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 195.64 புள்ளிகள் உயர்ந்து 25,960.78 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் சென்செக்ஸ் குறியீடு 73.20 புள்ளிகள் உயர்ந்து 8,002.30 புள்ளிகளை எட்டியது.


Click it and Unblock the Notifications