திங்கட்கிழமை அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவின் காரணமாக, செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 1,300 புள்ளிகள் வரையிலான சரிவை சந்தித்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மும்பை பங்குச்சந்தையின் இன்றைய சரிவிற்கு மிக முக்கியக் காரணமாக அமெரிக்கச் சந்தை விளங்கிய நிலையில், 2 மணிக்கு மேல் உயர்வைச் சந்தித்தது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
சர்வதேச சந்தை
அமெரிக்கப் பங்குச்சந்தையின் மோசமான நிலையின் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்தில் ஆசிய சந்தை, ஐரோப்பிய சந்தை என இரண்டுமே அதிகளவிலான சரிவில் வர்த்தகம் செய்து வருகிறது.
மும்பை பங்குச்சந்தை
அதிகளவிலான அன்னிய முதலீட்டில் இயங்கி வரும் மும்பை பங்குச்சந்தை சர்வதேச சந்தையின் வீழ்ச்சியின் காரணமாக அதிகப்படியான சரிவை சந்தித்து.
ஆனால் 2 மணிக்கு மேல் வங்கி நிஃப்டியில் ஏற்பட்ட உயர்வின் காரணமாகச் சென்செக்ஸ் உயர்வடையத் துவங்கியது. இதனால் 1000 புள்ளிகள் சரிவில் இயங்கி வந்த சென்செக்ஸ் 2.37 புள்ளிகள் சரிவு வரையில் உயர்ந்தது.
வங்கி நிஃப்டி
மத்திய அரசு அன்மையில் எஸ்பிஐ வங்கிக்கு மறு மூலதன திட்டம் மூலமாக 8,800 கோடி ரூபாயினை அளிக்க இருப்பதாக அறிவித்ததை அனைவரும் அறிவோம்.
அதன் படி இந்த மூலதனத்திற்கு ஈடான பங்குகளை அரசுக்குக் கொடுக்க உள்ளதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது. இதற்கான முடிவுகள் இம்மாதம் நடைபெறும் நாணய கொள்கை கூட்டத்தில் எடுக்க உள்ளது.
இதுவே சென்செக்ஸ் மற்றும் நீஃப்டி குறியீடு மீண்டதற்கான காரணம்.
சென்செக்ஸ்
இன்று காலை வர்த்தகத்தில் 1300 புள்ளிகள் வரையில் சரிந்த சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடிவில் 561.22 புள்ளிகள் சரிவில் 34,195.94 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
நிஃப்டி குறியீடு
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 168.30 புள்ளிகள் சரிந்து 10,498.25 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
52 வாரம்
செவ்வாய்க்கிழமை வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்த போதிலும் மும்பை பங்குச்சந்தையில் போலாரிஸ் கண்சல்டிங் மற்றும் சர்வீசஸ் நிறுவனம் உட்படச் சுமார் 32 நிறுவனங்கள் இன்று 52 வார உயர்வைப் பதிவு செய்தது.
மறுபுறம் 200 நிறுவனங்களின் பங்குகள் 52 வாரச் சரிவை சந்தித்தது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications