கடந்த சில நாட்களாக மும்பை பங்குச்சந்தை பல்வேறு வர்த்தகச் சூழ்நிலையின் காரணமாக மந்தமான வர்த்தகத்தை மட்டுமே பதிவு செய்த நிலையில், இரு வாரமாகத் தொடர்ந்து உயர்ந்து இன்றைய வர்த்தகத்தில் 2 மாத உயர்வைச் சந்தித்துள்ளது.
முதலீடு
நேற்று ஏப்ரல் மாத ஆர்டர்கள் முடிந்த நிலையில் வர்த்தகம் சரிவுடன் முடிந்தது. இன்று மே மாதத்திற்கான ஆர்டர்கள் முதலீட்டுக்காகத் துவங்கிய காரணத்தால் மும்பை பங்குச்சந்தையில் காலை முதல் முதலீடு அதிகரிக்கத் துவங்கியது.
ஐரோப்பிய சந்தை
மேலும் ஐரோப்பிய சந்தை துவங்கி பின்பு மும்பை பங்குச்சந்தையில் அதீத முதலீடு குவிந்த காரணத்தால், 100 புள்ளிகள் உயர்வில் இருந்த சென்செக்ஸ் 250 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 212.33 புள்ளிகள் உயர்ந்து 34,713.60 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 47.25 புள்ளிகள் உயர்ந்து 10,617.80 புள்ளிகள் எட்டி இன்றைய வர்த்தகம் முடிந்தது.
யெஸ் வங்கி
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் யெஸ் வங்கி 8.26 சதவீதம் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


Click it and Unblock the Notifications