மும்பை: இந்திய பங்கு சந்தையானது கடந்த 2 அமர்வுகளாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.
இன்று காலை தொடக்கத்திலேயே சற்று ஏற்றத்தில் தொடங்கிய நிலையில், முடிவிலும் நல்ல ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.
சென்செக்ஸ் 468.38 புள்ளிகள் அதிகரித்து, 61,806.19 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 151.45 புள்ளிகள் அதிகரித்து, 18,420.45 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. கடந்த இரு அமர்வுகளாக சரிவினைக் கண்ட நிலையில் இன்று மீண்டும் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் லாபம் பார்த்துள்ளனர் எனலாம்.
அனைத்து குறியீடுகளும் ஏற்றம்
இன்றைய சந்தை அமர்வில் நிஃப்டி ஐடி மற்றும் பி எஸ் இ டெக் தவிர மற்ற அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. மற்ற அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்தில் காணப்பட்டாலும் நிஃப்டி பிஎஸ்இ, பிஎஸ்இ எஃப் எம் சி ஜி, நிஃப்டி ஆட்டோ உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள அதானி போர்ட்ஸ், எம் & எம், ஈச்சர் மொட்டார்ஸ், பவர் கிரிட் கார்ப், அதானி எண்டர்பிரைசஸ் உள்ளிட்ட பங்குகளும் டாப் கெயினர்களாக காணப்படுகிறது. இதே டிசிஎஸ், இன்போசிஸ், ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாக உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எம் & எம், பவர் கிரிட் கார்ப், பார்தி ஏர்டெல், பஜாஜ் பின்செர்வ், ஹெச் யு எல் உள்ளிட்ட பங்குகளும் டாப் கெயினர்களாக காணப்படுகிறது. இதே டிசிஎஸ், இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, இந்தஸ்இந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாக உள்ளன.
ரூ.2.5 லட்சம் கோடி லாபம்
பி எஸ் இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த அமர்வில் 285.5 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது இன்று 288 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. ஒரே நாளில் 2.5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஷார்ட் கவரிங்
சந்தையில் தொடர்ந்து ஷார்ட் கவரிங் இருந்து வரும் நிலையில், இது இன்று சந்தைக்கு சாதகமாக அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய சந்தையில் சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இது இந்திய சந்தையில் முதலீடுகளை அதிகரிக்க தூண்டலாம்.
ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம்
வரவிருக்கும் சந்தை அமர்வுகளிலும் சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்தையில் முதலீட்டாளர்களை வாங்க தூண்டலாம்.
டெக்னிக்கலாக நிஃப்டியின் சப்போர்ட் லெவல் ஆக 18,250 ஆக கணித்துள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓரளவு ஏற்றம்
ஐடி குறியீடுகள் தவிர மற்ற குறியீடுகள் ஓரளவு லாபத்தினை கொடுத்துள்ளன. குறிப்பாக ஆட்டோ, மெட்டல் மற்றும் எஃப் எம் சி ஜி உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. இதே ஐடி மற்றும் பார்மா துறையானது சந்தையில் சற்று சரிவில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications