மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டியும் தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிகபட்ச புள்ளிகளைத் தொட்டுள்ளது.
தேசிய பங்கு சந்தைக் குறியீடான நிப்டி 15 புள்ளிகள் அதாவது 0.15 சதவீதம் உயர்ந்து 9,786.05 புள்ளிகளாக வர்த்தக நேர முடிவில் இருந்தது. அதே நேரம் இன்று அதிகபட்சமாக 9,829.40 புள்ளிகளைத் தொட்டுப் பார்த்தது.
மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 31.45 புள்ளிகள் அதாவது 0.1 சதவீதம் உயர்ந்து சந்தை நேர முடிவில் 31,747.09 புள்ளிகளாக இருந்தது. மேலும் அதிகபட்ச புள்ளிகளான 31,885.11 புள்ளிகளை இன்று சென்செக்ஸ் தொட்டது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம் மற்றும் தொழிற்துறை உற்பத்தி தரவு
முதலீட்டாளர்கள் புதன்கிழமை வெளியாக இருக்கும் பணவீக்கம் மற்றும் தொழிற்துறை உற்பத்தி தரவினை நோக்கிக் காத்திருக்கின்றார்கள்.
லாபம் அளித்த துறை சார்ந்த பங்குகள்
மும்பை பங்குச் சந்தையினைப் பொருத்தவரை ஐடி துறை பங்குகள் 0.91 சதவீதமும், ஆடோமொபைல் துறை பங்குகள் 0.8 சதவீதமும், டெக் துறை பங்குகள் 0.35 சதவீதமும், கேப்பிட்டல் கூட்ஸ் துறை சார்ந்த பங்குகள் 0.28 சதவீதமும் உயர்வைப் பெற்றுள்ளன.
சரிந்த துறை சார்ந்த பங்குகள்
அதே நேரம் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் 1.56 சதவீதமும், இன்ப்ராஸ்டர்க்ச்சர் துறை பங்குகள் 0.72 சதவீதமும், நுகர்வோர் சாதன துறைகளில் பங்குகள் 0.7 சதவீதமும், ஹெல்த்கேர் துறை சார்ந்த பங்குகள் 0.65 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளன.
டாப் 5 லாபம் அளித்த பங்குகள்
பஜாஜ் ஆட்டோ (+ 2.44%), டாடா மோட்டார்ஸ் (+ 2.28%), என்டிபிசி (+ 1.81%), எம் & எம் (+ 1.77%) மற்றும் இன்ஃபோசிஸ் (+ 1.75%)
சரிவைச் சந்தித்த பங்குகள்
பார்தி ஏர்டெல் (-2.59%), சிப்லா (-2.06%), விப்ரோ (-1.92%), நிலக்கரி இந்தியா (-1.85%) மற்றும் ஓஎன்ஜிசி (-1.54%)
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications