தொடர்ந்து மூன்றாவது மாதமாக இந்திய பங்கு சந்தையானது சரிவில் காணப்படுகிறது. நிஃப்டி கடந்த பிப்ரவரி மாதத்தில் மூன்றாவது மாதமாக 2% சரிவினைக் கண்டுள்ளது. சென்செக்ஸ்-ம் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.
சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், இந்திய சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
தொடர்ந்து பணவீக்கத்தின் மத்தியில் வட்டி விகிதத்தினை மத்திய வங்கிகள் அதிகரித்து வருகின்றன. இது மேற்கொண்டு பொருளதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்த வழிவகுத்துள்ளன.
முதலீடுகள் வெளியேற்றம்
சந்தையில் நிலவி வந்த ஏற்ற இறக்கத்தின் மத்தியில் அன்னிய முதலீடுகள் இந்திய சந்தையில் இருந்து வெளியேறி வருகின்றன. இது மேற்கொண்டு பங்கு சந்தையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக, வட்டி விகிதம் என்பது தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை சரிவு
தற்போது நிறுவனம் மூலம் முதலீடு செய்யும் முதலீட்டாளார்கள் என்பது பாசிட்டிவாக இருந்தாலும், இந்திய சந்தையானது சரிவில் காணப்படுகின்றது. இந்த ட்ரெண்டிங் தொடர்ந்து இனியும் கொஞ்ச காலம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இனியும் இந்தபோக்கு தொடருமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது.
நீண்டகால நோக்கில் வாங்கலாம்
எனினும் தொடர்ந்து சந்தையானது சரிவில் இருந்து வந்த நிலையில், ஷார்ட் கவரிங் என்பது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது நீண்டகால நோக்கில் சந்தை ஏற்றம் காண வழிவகுக்கலாம்.
எனினும் மீடியம் டெர்மில் சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது இருக்கலாம். ஆக நீண்டகால நோக்கில் லாபம் கிடைக்க வங்கிகள், கேப்பிட்டல் குட்ஸ், ஐடி பங்குகள் என பலவும் நீண்டகால நோக்கில் நல்ல லாபம் கொடுக்கலாம் என ஜியோஜித் பைனான்ஷியல் சேவை நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து 3 மாதம் சரிவு
கடந்த 20 ஆண்டுகளில் இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து 4 மாதம் சரிவினைக் கண்டதும் இல்லை. குறிப்பாக 2008 - 2020ல் இல்லை. ஆக கடந்த டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சந்தையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்த நிலையில், மார்ச் மாதத்தில் அப்படி இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மார்ச் மாதத்தில் சந்தை சாதகமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. எனினும் இது மார்ச் மாத முடிவிலேயே தெரிய வரும்.
விற்பனை செய்யலாமா?
தொடர்ந்து பங்கு சந்தை கடந்த மூன்று மாதங்களாகவே சரிவினைக் கண்டு வருகின்றதே. இந்த இடத்தில் விற்பனை செய்யலாமா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கலாம். ஆனால் தொடர்ந்து சரிவினைக் கண்டுள்ள நிலையில், பல நல்ல நல்ல நிறுவனங்களின் பங்குகள் கூட சரிவினைக் கண்டுள்ளன. ஆக இதன் காரணமாக பங்குகளை குறைந்த விலையில் நீண்டகால நோக்கில் வாங்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
மீண்டும் ஏற்றம் காணலாம்
நடப்பு ஆண்டில் இந்திய சந்தையில் இருந்து அன்னிய போர்ட்போலியோ முதலீடுகள் என்பது, 32,500 கோடி ரூபாய் (3.93 பில்லியன் டாலர் அளவுக்கு) வெளியேறியுள்ளது. சர்வதேச சந்தைகளும் சமீபத்திய காலமாக முடங்கியுள்ள நிலையில், மீண்டும் இந்திய சந்தியயில் முதலீடுகள் அதிகரிக்கலாமோ என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஆக இந்தியா பங்கு சந்தையானது வரவிருக்கும் வாரங்களில் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கலாம்.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications