மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை..!
ஜனவரி மாதத்தின் கடைசி வியாழக்கிழமை என்பதால் இம்மாதத்திற்கான ஆர்டர்கள் முடிந்தது, இதனாலேயே இன்று வர்த்தகம் துவக்கம் மந்தமாக இருந்தது. ஆனால் ஐரோப்பிய சந்தை துவங்கி பின்பு கணிசமான உயர்வைச் சந்தித்தாலும் இன்றைய வர்த்தகம் சரிவுடனே முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் ஜனவரி மாத ஆர்டர்கள் முடிவடையும் காரணத்தால் மும்பை பங்குச்சந்தையில் புதிய முதலீடுகள் ஏதுமில்லை. இதனால் இன்றைய வர்த்தகம் துவக்கம் முதலே சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிவில் துவங்கியது.

2 மணிக்கு மேல் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு கணிசமாக உயர்ந்து சரிவின் அளவை 25.36 புள்ளிகளைக் குறைத்து வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 33,819.50 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 14.75 புள்ளிகள் சரிந்து 10,382.70 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications