இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு மிகவும் குறைந்த காலக்கட்டத்தில் மிகப்பெரிய உயரத்தை அடைந்த நிலையில், கடந்த 5 வர்த்தக நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இதன் மூலம் நிஃப்டி குறியீடு இன்று தொடர் சரிவின் எதிரொலியாக ஒரு மாத சரிவையும், சென்செக்ஸ் குறியீடு 180 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
ரிசர்வ் வங்கி
இன்றைய சரிவிற்கு முக்கியப் பங்கு வகிப்பது வங்கித்துறை பங்குகள். இந்திய வணிக வங்கிகளில் இருக்கும் வராக்கடனுக்குக் காரணமாக நிறுவனங்கள் மற்றும் கணக்குகளைத் திவாலாக அறிவிக்கும் நிலையில், இதற்கான பணிகளுக்கு அதிகத் தொகையைக் கோரியுள்ளது ரிசர்வ் வங்கி.
வங்கிகளுக்கு இழப்பு
இதற்காக வங்கிகள் சுமார் 50,000 கோடி ரூபாயை அளவிலான வருமானத்தை இழக்க வேண்டிய சூழ்நிலையில் தற்போது வங்கிகள் உள்ளது.
சரிவு
இதன் காரணமாக இன்று பங்குச்சந்தை வர்த்தகத்தில் வங்கித்துறை பங்குகள் அதிகளவிலான வர்த்தகச் சரிவை சந்தித்தது. மேலும் ஐரோப்பிய சந்தை வர்த்தகத்தில் சிறிது வளர்ச்சியைச் சந்தித்தாலும், சரிவிலேயே இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 180 புள்ளிகள் சரிந்து 30,958 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 63.55 புள்ளிகள் குறைந்து 9,511.40 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
மேலும் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, இன்போசிஸ், ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications