தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி குறியீடு வியாழக்கிழமை வர்த்தகத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் சிறப்பான வர்த்தகச் சூழ்நிலையின் காரணமாக 9,000 புள்ளிகள் வரை உயர்ந்து 2 வருட உயர்வை எட்டியது.
தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி குறியீடு வியாழக்கிழமை வர்த்தகத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் சிறப்பான வர்த்தகச் சூழ்நிலையின் காரணமாக 9,000 புள்ளிகள் வரை உயர்ந்து 2 வருட உயர்வை எட்டியது.
அதேபோல் சென்செக்ல் குறியீடும் காலை வர்த்தகம் துவங்கிய முதல் நிலையான வர்த்தகத்தைப் பெற்றுவந்த நிலையில், மாலை நேரத்தில் அதிகளவிலா பங்கு விற்பனையின் காரணமாகத் தொடர்ந்து சரிவை சந்தித்தது.
மதியம் 2.30 மணிக்கு மேல் மும்பை பங்குச்சந்தையில் ரியல் எஸ்டேட், பவர், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சுகாதாரத்துறை நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் இரண்டுமே 2 வருட உச்சத்தை இழந்த நிலையில், சரிவுடன் வர்த்தகம் முடிவடைந்தது.
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 144.70 புள்ளிகள் சரிந்து 28,839.79 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 46.05 புள்ளிகள் சரிந்து 8,899.75 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.

Click it and Unblock the Notifications