5 நாள் தொடர் சரிவில் இருந்த மும்பை பங்குச்சந்தை இன்றைய வர்த்தகத்தில் ஐடி, டெலிகாம் மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மீது முதலீடு அதிகரித்த காரணத்தால் லாபகரமான நிலையில் இன்றும் மும்பை பங்குச்சந்தை இருந்தது.
இதேபோல் அமெரிக்கப் பெடரல் வங்கியின் புதிய தலைவர் ஜெரோம் பவல் தலைமையிலான நாணய கொள்கை கூட்டம் நடைபெற்று வருகிறது, இதன் முடிவுகள் நாளை தெரியும். இதன் எதிரொலியாகவும் இன்றைய வர்த்தகத்தில் பெரிய அளவிலான மாற்றும் பாதிப்பு இல்லை.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 73.64 புள்ளிகள் உயர்ந்து 32,996.76 புள்ளிகளை அடைந்தது, இதேபோல் நிஃப்டி குறியீடு 30.10 புள்ளிகள் 10,124.35 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், சன் பார்மா, விப்ரோ, டாக்டர் ரெட்டி, அதானி போட்ஸ் ஆகியவை அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications