நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் தொடக்கத்தில் சற்று சரிவில் தொடங்கியிருந்த நிலையில், தற்போதும் சரிவில் காணப்படுகின்றது.
இது கடந்த வாரத்தில் இருந்து தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் நிலையில், இன்றும் மீண்டும் சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க பங்கு சந்தைகள் உள்கட்டமைப்பு குறித்தான ஊக்குவிப்பு அறிவிப்புகள் வெளியான நிலையில், ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன. இதனை தொடர்ந்து இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்தில் தான் தொடங்கின.
முதலீடுகள் வரத்து
எனினும் தொடர்ந்து சந்தையில் உள் நாட்டு முதலீடுகள் என்பது அதிகரித்து வந்தாலும், குறைந்து வரும் அன்னிய முதலீடுகள், பணவீக்கம் பற்றிய கவலைகள், தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா உள்ளிட்ட பல காரணிகளினால் சந்தை சரிவில் காணப்படுகிறது. இது மேற்கொண்டு சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன காரணம்
இதற்கிடையில் இன்று 160 நிறுவனங்கள் தங்களது செப்டம்பர் காலாண்டு முடிவினை வெளியிட உள்ளன. குறிப்பாக போஷ், மஹிந்திரா & மஹிந்திரா, பவர் கிரிட் கார்ப், அஸ்ட்ராஜெனிகா பார்மா, பிஹெச்.இஎல், ஹெச் இ ஜி, இந்திரபிரசாத கேஷ், எம் ஆர் எஃப், பெட்ரோநெட் எல்என்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் காலாண்டு முடிவுகளை வெளியிடவுள்ளன.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. சென்செக்ஸ் 203.56 புள்ளிகள் அதிகரித்து, 60,749.17 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 36.80 புள்ளிகள் அதிகரித்து, 18,031.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. எனினும் தொடக்கத்தில் சற்று சரிவில் காணப்பட்டன. சென்செக்ஸ் 45.68 புள்ளிகள் குறைந்து, 60,499.93 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி சற்று அதிகரித்து, 18,069 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1115 பங்குகள் ஏற்றத்திலும், 464 பங்குகள் சரிவிலும், 110 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், எம்&எம், கிரசிம், சன் பார்மா, இந்தஸ்இந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பிரிட்டானியா, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, நெஸ்டில், பவர் கிரிட் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எம்&எம், சன் பார்மா, இந்தஸ்இந்த் வங்கி, இந்தஸ்இந்த் வங்கி, பஜாஜ் ஆட்டோ, லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, நெஸ்டில், பவர் கிரிட் கார்ப்பரேஷன், ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
தற்போது சென்செக்ஸ் 141.75 புள்ளிகள் குறைந்து, 60,403.86 புள்ளிகளாகவும், நிஃப்டி 28.10 புள்ளிகள் அதிகரித்து, 18,040.45 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இது இன்னும் சற்று சரியும் விதமாகவே காணப்படுகின்றது. இதற்கிடையில் ஆட்டோ மொபைல் துறை பங்குகள், மிட் கேப் மற்றும் ஸ்லாம் கேப் பங்குகள் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.
More From GoodReturns

தொடர்ந்து 2ஆவது நாளாக விலை சரிந்த தங்கம்..!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன?

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

ETF vs மியூச்சுவல் ஃபண்ட்: உங்கள் பணத்தை எதில் போட்டால் டபுள் லாபம்?

PPF கணக்கு ஆரம்பிக்க போறீங்களா? இந்த ஒரு தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க!

வாழ்க்கையை என்ஜாய் பண்ண சீக்கிரம் ரிடையர்மெண்ட்? மாதம் ரூ.75,000 டூ 1 லட்சம் பென்ஷன் வேண்டுமா?

வெள்ளி 15% சரிவு.. தங்கம் 3% ஏற்றம்! குழப்பத்தில் முதலீட்டாளர்கள் - இப்போது என்ன செய்வது?

தங்கம் Vs வெள்ளி:ETF ரேஸில் ஜெயிப்பது யாரு? 2026-ல் உங்கள் பணத்தை எதில் போடலாம்?

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

டாடா கெமிக்கல்ஸை ஓரங்கட்டிய 2 பங்குகள்! மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் செய்த அதிரடி முதலீடு!

இந்தியாவில் ஏன் தங்கம் விலை உயர்கிறது? - உலக தங்க கவுன்சில் தலைவர் கொடுக்கும் விளக்கம்

தங்கத்தில் முதலீடு செய்யப் போறீங்களா ? இவ்வளவு செஞ்சீங்கன்னா போதும் : ரே டேலியோ கூறும் கணக்கு



Click it and Unblock the Notifications