290 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்
இந்தியாவில் பல்வேறு கார்பரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் இந்திய சந்தைக்கு இன்று மிகவும் சாதகமான அமைந்துள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து அதிகளவிலான அன்னிய முதலீடுகள் மட்டும் அல்லாமல் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயும் அதிகரித்துள்ளது.
அதேபோல் பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் சர்வதேச சந்தையில் புதிய வேகத்தை அளித்துள்ளது.
லாபத்தில் மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகம் துவக்கம் முதலே லாபத்தில் துவங்கிய மும்பை பங்குச்சந்தை, நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், ரூபாய் மதிப்பின் உயர்வு எனப் பல்வேறு காரணங்களுக்காகத் தொடர்ந்து உயர்வை அடைந்தது.
இதனால் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1 சதவீதம் வரை அதிகரித்துக் காணப்பட்டது.

சென்செக்ஸ்
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 290.54 புள்ளிகள் உயர்ந்து 29,655.84 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 98.55 புள்ளிகள் உயர்ந்து 9,217.95 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications