அமெரிக்க பணவீக்கமும், வட்டி விகித உயர்வும் சர்வதேச முதலீட்டு சந்தையில் பெரிய முட்டுக்கட்டையாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் பணவீக்கம் நினைத்தப்படி 2 சதவீதம் வரையில் குறையவில்லை என்றாலும் 3.3 சதவீதம் வரையில் குறைந்தது.
இதனால் ஒட்டுமொத்த முதலீட்டு சந்தையும் அமெரிக்காவின் பென்ச்மார்க் வட்டி விகித குறைப்பிற்காக காத்திருந்தது. இந்த நிலையில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் முதலீட்டாளர்களை குளிர்விக்கும் வகையில் 2024 ஆம் ஆண்டிலும் பணவீக்கம் தொடர்ந்து குறையும் பாதையில் இருந்தால் வட்டி விகிதம் 3 முறை குறைக்கப்படும் என அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அமெரிக்க பங்குச்சந்தை தடாலடியாக உயர்ந்தது மட்டும் அல்லாமல் அமெரிக்க அரசு பத்திர முதலீட்டு சந்தையில் இருந்து பெரும் பகுதி பணம் வெளியேறி இதன் லாப அளவு 4 சதவீதமாக குறைந்தது. இந்த ஒரு அறிவிப்பு அமெரிக்க பங்குச்சந்தை தாண்டி ஆசிய மற்றும் இந்திய பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் ரிஸ்க் எடுத்து முதலீடு செய்ய தூண்டியுள்ளது.
இதன் எதிரொலியாக வியாழக்கிழமை வர்த்தகத்தில் காலையிலேயே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சுமார் 1 சதவீதம் வரையில் உயர்ந்தது. இந்த திடீர் முதலீட்டு உயர்வின் மூலம் அதிகம் பலன் அடைய போவது லார்ஜ் கேப் பங்குகள் தான், குறிப்பாக ஐடி சேவை நிறுவன பங்குகள் அதிகளவிலான முதலீட்டை ஈர்க்கும்.
9.45 மணியளவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 779.81 புள்ளிகள் உயர்ந்து 70.368.69 புள்ளிகளை தொட்டு உள்ளது, இதன் மூலம் காலை வர்த்தகத்திலேயே சென்செக்ஸ் 1.13 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இன்று சென்செக்ஸ் அதிகப்படியாக 70,426.89 புள்ளிகளை தொட்டு உள்ளது.
நிஃப்டி குறியீடு 209.20 புள்ளிகள் உயர்ந்து 21,135.55 புள்ளிகளை எட்டியுள்ளது, அதிகப்படியாக 21,148.45 புள்ளிகளை தொட்டு உள்ளது. மேலும் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் எதிர்பார்த்ததை போலவே ஐடி பங்குகள் அதிகளவிலான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.
டெக் மஹிந்திரா பங்குகள் அதிகப்படியாக 3.53 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது, ஹெச்சிஎல் 3.06 சதவீதமும், விப்ரோ 2.78 சதவீதமும், பஜாஜ் பைனான்ஸ் 2.50 சதவீதமும், இன்போசிஸ் 2.29 சதவீதமும், டிசிஎஸ் 1.86 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், மாருதி சுசூகி, டைட்டன், ஏசியன் பெயின்ட்ஸ், சன் பார்மா, நெஸ்லே, பவர் கிரிட் ஆகியவை சரிவில் உள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 929.60 புள்ளிகள் உயர்ந்து 70,514.20 புள்ளிகளை எட்டியுள்ளது, சென்செக்ஸ் அதிகப்படியாக 70,602.89 புள்ளிகளை அடைந்தது. நிஃப்டி குறியீடு 256.35 புள்ளிகள் உயர்ந்து 21,182.70 புள்ளிகளை எட்டியிருக்கும் வேளையில் அதிகப்பசியாக 21,210.90 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.
More From GoodReturns

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications