இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க நுகர்வோர் பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 3.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக இன்று காலை வர்த்தகத்தில் ஒட்டுமொத்த ஆசிய சந்தையும் உயர்வுடன் காணப்பட்ட நிலையில், இந்திய பங்குச்சந்தை குறியீடுகளும் சிறப்பான உயர்வை பதிவு செய்தது.
கடந்த சில நாட்களாக நிஃப்டி 50 குறியீடு 20000 புள்ளிகளை தாண்டி தினமும் வரலாற்று உச்சத்தை தொட்டு வந்த நிலையில் இன்று அமெரிக்க நுகர்வோர் பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 3.7 சதவீதமாக உயர்ந்த காரணத்தால் சென்செக்ஸ் குறியீடும் வரலாற்று உச்சத்தை தொட்டு உள்ளது.

இன்று காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 67,771.05 புள்ளிகள் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டு முதலீட்டாளர்களை குஷிப்படுத்தியது. இதேபோல் நிஃப்டி குறியீடு அதிகப்படியாக 20,167.65 புள்ளிகளை தொட்டு புதிய வரலாற்று உச்சத்தை தொட்டு உள்ளது.
சென்செக்ஸ் குறியீடு நேற்றைய வர்த்தக முடிவில் 67,466.99 புள்ளிகளில் முடிந்த நிலையில் இன்று காலை வர்த்தகத்தில் அமெரிக்க நுகர்வோர் பணவீக்கம் மற்றும் ஆசிய சந்தைகளின் எதிரொலியால் 67,627.03 புள்ளிகளில் துவங்கியது. இது இந்திய முதலீட்டாளர்களுக்கு பெரிய பூஸ்ட்டாக இருந்த நிலையில் சில நிமிடத்தில் 67,771.05 என்ற வரலாற்று உயர்வுக்கு சென்றது.
ஆனால் வழக்கம் போல் பல ரீடைல் முதலீட்டாளர்கள் லாப நோக்கத்திற்காக அதிகப்படியான பங்கு முதலீட்டை விற்பனை செய்தனர், இதனால் சென்செக்ஸ் குறியீடு 67,435.88 புள்ளிகள் வரையில் சரிந்தது.
இதேபோல் நிஃப்டி குறியீடு காலை வர்த்தகத்தில் 20,167.65 புள்ளிகளை எட்டி, 20,100.95 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது. சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்களில் 16 நிறுவனங்கள் சரிந்துள்ளது. ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, டைட்டன், ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை சரிவை எட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications