வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்கு சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் புதிய உச்சத்தினைத் தொட்டுள்ளன. பொதுத் துறை வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டு மறு மூலதினத்தின தாக்கம் இன்றும் பங்கு சந்தையில் தெரிந்தது.
ஆசிய சந்தையின் இன்று முதலீட்டாளர்களுக்குச் சாதகமாக இருந்தது, உள்நாட்டு முதலீட்டாளர்களும் அதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டனர். நவம்பர் மாதத்திற்கான F&O-ம் உயர்வுக்கான முக்கியக் காரணமாக இருந்துள்ளது.
சந்தை நிலவரம்
மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 108.94 புள்ளிகள் உயர்ந்தது அதாவது 0.33 சதவீதம் உயர்ந்து 33,26616 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது, அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 406 புள்ளிகள் என 0.39 சதவீதம் உயர்ந்து 10,363.65 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.
துறை வாரியன அறிக்கை
மும்பை பங்கு சந்தையினைப் பொருத்த வரையில் நுகர்வோர் சாதன துறை பங்குகள், ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் கேஸ், இன்பிராஸ்டரக்ச்சர் துறை சார்ந்த பங்குகள் லாபத்தினை அளித்தன. மறு பக்கம் எப்எம்சிஜி மற்றும் மெட்டல் துறை சார்ந்த பங்குகள் நட்டத்தினை அளித்தன.
லாபமீட்டியவர்கள்
லுபின் (+ 2.67%), ஓஎன்ஜிசி (+ 1.69%), பார்தி ஏர்டெல் (+ 1.59%), டாக்டர் ரெட்டிஸ் (+ 1.57%), டாடா மோட்டார்ஸ் (+ 1.34%)
நட்டம் அடைந்தவர்கள்
எச்யூஎல் (-1.71%), ஐடிசி (-1.56%), டாடா ஸ்டீல் (-1.03%), விப்ரோ (-0.98%) மற்றும் எம் & எம் (-0.83%)


Click it and Unblock the Notifications