வாரத்தின் முதல் நாளான இன்று வர்த்தகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வண்ணம், சென்செக்ஸ், நிஃப்டியின் அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றன. இதற்கிடையில் தற்போது மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ்
589 புள்ளிகள் அதிகரித்து, 42,482 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 166 புள்ளிகள் அதிகரித்து 12,429 ஆகவும் உள்ளது.
இந்நிலையில் 1115 பங்குகள் ஏற்றத்திலும், இதே 282 பங்குகள் சரிவிலும், 51 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.
இதே ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 238 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 42,131 ஆகவும், இதே நிஃப்டி 123 ஏற்றத்தில் 12,387 ஆகவும் காணப்பட்டது கவனிக்கதக்கது.
கடந்த வாரத்தில் அன்னிய முதலீடுகளின் வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த நவம்பர் 3 அன்று நிகரவரத்து 2,274.40 கோடி ரூபாயாகவும், இதே நவம்பர் 146.22 கோடி ரூபாயாகவும், இதே நவம்பர் 5 அன்று 5,368.31 கோடி ரூபாயாகவும், இதே நவம்பர் 6 அன்று 4,869.87 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. ஆக இந்த மாதத்தில் இதுவரையில் 13,399.41 கோடி ரூபாயாகவும் அன்னிய முதலீடுகள் உள்ளன. இது கடந்த மாதத்தில் 14,537.40 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. ஆக இதுவும் ஒருவகையில் சந்தை ஏற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.
இதே ஹெச் 1பி விசா தளர்வினால், குறிப்பாக ஐடி பங்குகள் டாப் கெயினர்களாக உள்ளன.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அனைத்து பங்குகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகிறது. குறிப்பாக ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ் பங்கு, ஹெச்சிஎல் உள்ளிட்ட பங்குகள் 2% மேல் வர்த்தகமாகி வருகின்றன. இதே பவர் கிரிட் கார்ப், டெக் மகேந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் மாருதி, ஹெச் டி எஃப்சி வங்கி, டாடா ஸ்டீல், கோடாக் பேங்க், ரிலையன்ஸ், பார்தி ஏர்டெல், டிசிஎஸ், ஐடிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், அல்ட்ராசெம், என்டிபிசி, எல் & டி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் 2% கீழ் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. இதே எம் & எம், ஹெச் டி எஃப்சி, எஸ்பிஐ, டைட்டன், இந்தஸ் இந்த் வங்கி, பஜாஜ்பின்செர்வ், ஓஎன்ஜிசி, நெஸ்டில் இந்தியா, சன்பார்மா, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் 1 சதவீதற்கு கீழ் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. இதே நிஃப்டி குறியீட்டிலும் முன்னணி பங்குகள் பலவும் ஏற்றத்த்தில் தான் காணப்படுகிறது.
அதோடு சென்செக்ஸ், நிஃப்டியின் அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றன. இதற்கிடையில் தற்போது மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 589 புள்ளிகள் அதிகரித்து, 42,482 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 166 புள்ளிகள் அதிகரித்து 12,429 ஆகவும் காணப்படுகிறது.