புதன்கிழமை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் உயர்வால் பன்னாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்றுவிட்டு முதலீட்டைத் திரும்பப்பெற்றனர்.
இந்நிலையில் இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை 150 புள்ளிளுக்கும் அதிகமான வர்த்தகத்தைப் பெற்று உயர்வுடன் காணப்பட்டது.
மும்பை பங்குச்சந்தை
புதன்கிழமை காலையில் சென்சென்ஸ் குறியீட்டில் அதிகமான வர்த்தகம் காணப்பட்டாலும் படிப்படியாகப் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்ய முதலீட்டை வெளியேற்றிய காரணத்தால் தொடர்ந்து சரிந்த வண்ணமாகவே இருந்தது.
ஆயினும் மதியம் 12 வரையிலும் லாபகரமான நிலையிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய
தொடர்ந்து சரிந்து வந்த மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் ஐரோப்பா சந்தையில் கணிசமான வர்த்தகத்தைப் பார்த்தாலும், சரிவுடனேயே வர்த்தகம் செய்யப்பட்டது.
சென்செக்ஸ்
இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வெறும் 32.12 புள்ளிகள் உயர்ந்து 33,250.93 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று பல ஏற்ற இறக்கங்கள் உடன் வெறும் 5.80 புள்ளிகள் உயர்ந்து 10,308.95 புள்ளிகள் அடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல், ஏசியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தக உயர்வை அடைந்தது.


Click it and Unblock the Notifications