மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு கடந்த 2 நாளாக உயர்வுடனேயே இருந்தாலும் தொடர்ந்து வர்த்தக உயர்வைச் சந்தித்து வருகிறது. ஆனால் இன்று பல ஏற்ற இறக்கங்களுக்குப் பின்பு வெறும் 26 புள்ளிகள் உயர்வில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் உயர்வுடன் முடிந்துள்ளது.
முதலீட்டாளர்கள்
இந்திய முதலீட்டுச் சந்தை குறித்து மூடிஸ் அமைப்பின் தர உயர்வின் மூலம் மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் புதிய உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதலீட்டாளர்கள் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்யும் படலத்தில் உள்ளனர்.
முக்கியத் துறை பங்குகள்
இன்று முதலீட்டாளர்கள் மெட்டல், நுகர்வோர் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்த காரணத்தால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு மதிய நேர வர்த்தகத்தில் பெரிய அளவிலான வர்த்தகச் சரிவை சந்தித்தது.
சென்செக்ஸ்
வியாழக்கிழமை வர்த்தகத்தில் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு உயர்வுடன் காணப்பட்ட நிலையில், மதிய நேர வர்த்தகத்தில் 90 புள்ளிகள் வரை சரிந்தது.
இதன் பின்பு தட்டுத்தடுமாறி வர்த்தக முடிவில் வெறும் 26.53 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 33,588.08 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.
நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 6.45 புள்ளிகள் சரிந்து 10,348.75 புள்ளியை அடைந்தது.
முக்கியமான நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையில் டாப் 30 இன்போசிஸ், சன் பார்மா, ரிலையன்ஸ், பவர் கிரின்டு, ஆக்சிஸ் வங்கி, ஹீரோ மோட்டோ கார்ப் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வைச் சந்தித்து இருந்தது.


Click it and Unblock the Notifications