இந்திய பங்கு சந்தைகள் கடந்த மூன்று வர்த்தக அமர்வுகளாக பெரியளவில் மாற்றமின்றி வர்த்தகமாகி வருகின்றன. அதுவும் இந்த வார தொடக்கம் வரையிலும் தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வந்த சந்தைகள், இன்றோடு மூன்று அமர்களாகவே சரிவினைக் கண்டு வருகின்றன.
இது தொடர்ந்து சர்வதேச சந்தைகளில் நிலவி வரும் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. எனினும் இந்திய சந்தைக்கு சாதகமாக அந்நிய முதலீடுகள் வரத்து வந்து கொண்டுள்ளது.
சொல்லப்போனால் ஜனவரியில் 8980.81 கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் 12ம் தேதி வரையில் 22,852.85 கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் வந்துள்ளது. ஆக இது சந்தைக்கு சற்று சாதகமாகவே பார்க்கப்படுகிறது.

என்ன காரணம்
இதே உள்நாட்டு முதலீடுகள் வழக்கத்திற்கு மாறாக கடந்த மாதத்தினை காட்டிலும், அதிகளவில் வெளியேறியுள்ளது. ஜனவரியில் 11,970.54 கோடி ரூபாய் வெளியேறிய நிலையில், பிப்ரவரியில் 12ம் தேதி வரையில் மட்டும் 14,246.14 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது. இது சந்தை தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வந்த நிலையில் புராபிட் காரணத்தினால் இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

சந்தை தொடக்கம்
இன்று காலை ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 11.16 புள்ளிகள் அதிகரித்து, 51,714.99 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 77.90 புள்ளிகள் அதிகரித்து 15,286.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து சந்தையின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 12.92 புள்ளிகள் சரிந்து 51,690.91 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 2.20 புள்ளிகள் சரிந்து 15,206 புள்ளிகளாகவும் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் 862 பங்குகள் ஏற்றத்திலும், 346 பங்குகள் சரிவிலும், 61 பங்குகள் மாற்றம் இல்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு
இதற்கு இடையில் நிஃப்டி சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஆட்டோ குறியீடுகள் தவிர, மற்ற குறியீடுகள் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள கெயில், ஓஎன்ஜிசி, பவர் கிரிட் கார்ப், ஐஒசி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஐசிஐசிஐ வங்கி, கோடக் மகேந்திரா, எம் &எம், ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஓஎன்ஜிசி, பவர் கிரிட் கார்ப், ஏசியன் பெயிண்ட்ஸ், எஸ்பிஐ, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே கோடக் மகேந்திரா, ஐசிஐசிஐ வங்கி, எம் &எம், ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம் என்ன?
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 41.34 புள்ளிகள் அதிகரித்து, 51,745.17 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 22.10 புள்ளிகள் அதிகரித்து, 15,231.00 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இதனையடுத்து ரூபாய் மதிப்பு 72.76 ரூபாயாக பெரியளவில் மாற்றமின்றி தொடங்கியுள்ளது. புதன்கிழமையன்று 72.75 ரூபாயாக முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.