கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது சற்று சரிவினைக் கண்டாலும், தொடர்ந்து ஏற்றத்தினையே கண்டு வருகின்றது.
இன்று சந்தை ப்ரீ ஒபனிங்கிலேயே சற்று ஏற்றத்தில் காணப்பட்டது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 10.32 புள்ளிகள் அதிகரித்து, 51,339.40 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 7 புள்ளிகள் அதிகரித்து 15,116.30 ஆகவும் இருந்தது.
இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்திலே தான் தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 108.54 புள்ளிகள் அதிகரித்து, 51,437.62 ஆகவும், இதே நிஃப்டி 43.90 புள்ளிகள் அதிகரித்து, 15,153.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 824 பங்குகள் ஏற்றத்திலும், 349 பங்குகள் சரிவிலும், 65 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
சரிவுக்கு என்ன காரணம்
சர்வதேச சந்தையின் எதிரொலி, சர்வதேச காரணிகள் பல, கொரோனா வைரஸ் தாக்கம், தடுப்பூசி பற்றிய அறிவிப்புகள், எல்லாவற்றுக்கும் மேலாக முதலீட்டாளர்கள் புராபிட் செய்யும் காரணத்தினாலும் சந்தை சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. மேலும் சர்வதேச முதலீட்டாளர்கள் அமெரிக்காவின் ஊக்கத்தொகை பற்றிய எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில், ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
இதற்கிடையில் நிஃப்டி குறியீட்டில் உள்ள பேங்க் நிஃப்டி, சென்செக்ஸ் குறியீடுகளில் உள்ள கேப்பிட்டல் கூட்ஸ், கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் சிவப்பு நிறத்திலும், மற்றவை அனைத்தும் பச்சை நிறத்திலும் காணப்படுகிறது.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஹெச்டிஎஃப்சி லைஃப், பஜாஜ் பின்செர்வ், அல்ட்ராடெக் சிமெண்ட், கெயில் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே அதானி போர்ட்ஸ், மாருதி சுசூகி, ஆக்ஸிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
இதே சென்செக்ஸ் குறியீட்டில் பஜாஜ் பின்செர்வ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்சிஎல் டெக், பஜாஜ் பைனான்ஸ், ஓஎன்ஜிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே மாருதி சுசூகி, ஆக்ஸிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், டெக் மகேந்திரா, இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தொடக்கத்தில் ஏற்றத்தில் தொடங்கினாலும், தற்போது சென்செக்ஸ் 79.23 புள்ளிகள் குறைந்து, 51,249.85 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 16.15 புள்ளிகள் குறைந்து, 15,093.15 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது. இது ஈக்விட்டி சந்தையில் செல்லிங் பிரசர் அதிகம் இருப்பதால் சற்று வீழ்ச்சி கண்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
More From GoodReturns

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications