பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படும் சென்செக்ஸ், நிஃப்டி.. இனி எப்படியிருக்கும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன. இது கடந்த வாரத்தில் இருந்து தொடர்ச்சியாக ஏற்றத்தினை கண்டு வந்த நிலையில், இன்று மீண்டும் சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது.

கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தைகள் சரிவில் முடிவடைந்திருந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் சரிவிலேயே காணப்பட்டன. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது.

பிட்காயினை ஆதரிக்கும் ஜேபி மோர்கன் சேஸ்.. தங்கத்தை விடப் பிட்காயின் பெஸ்ட்..! பிட்காயினை ஆதரிக்கும் ஜேபி மோர்கன் சேஸ்.. தங்கத்தை விடப் பிட்காயின் பெஸ்ட்..!

மேலும் அதிகரித்து வரும் பணவீக்கம் பற்றிய கவலைகள், தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா உள்ளிட்ட பல காரணிகளுக்கு மத்தியில் சரிவில் காணப்படுகிறது.

முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

கடந்த அக்டோபர் 11 நிலவரப்படி அன்னிய முதலீட்டாளர்கள் 1,303.22 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கினை விற்று வெளியேறியுள்ளனர். இதே சமயம் உள்நாட்டு முதலீட்டாளார்களும் 378.28 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றும் வெளியேறியுள்ளனர். இது சந்தையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று தடுமாற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 42.51 புள்ளிகள் குறைந்து, 60,093.27 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 17.80 புள்ளிகள் குறைந்து, 17,963.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதையடுத்து தொடக்கத்திலும் சற்று சரிவில் காணப்பட்டன. சென்செக்ஸ் 117.08 புள்ளிகள் குறைந்து, 60,018.70 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 11.70 புள்ளிகள் குறைந்து, 17,934.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ டெக், நிஃப்டி பிஎஸ்இ தவிர மற்ற குறியீடுகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், நிஃப்டி ஆட்டோ 1% மேலாக ஏற்றத்திலும், மற்ற குறியீடுகள் 1% கீழாக ஏற்றத்திலும் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்சிஎல் டெக், டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ், கோல் இந்தியா, எம் & எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் ஆட்டோ, டைட்டன் நிறுவனம், ஐடிசி, எஸ்பிஐ, பஜாஜ் பின்சேர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்.சி.எல் டெக், டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ், எம் & எம், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது சற்று குறைந்து, 75.38 ரூபாயாக சரிவினை கண்டுள்ளது. இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 17.75 புள்ளிகள் குறைந்து, 60,104.21 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 3 புள்ளிகள் குறைந்து, 17,942.95 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sensex, nifty trade flat amid volatility, nifty trade above 17,900

Market update.. sensex, nifty trade flat amid volatility, nifty trade above 17,900
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X