வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்றும் இந்திய சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன. கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வரும் இந்திய பங்கு சந்தைகள், தொடர்ந்து சரிவினைக் காண ஆரம்பித்துள்ளன.
அமெரிக்க பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், பணவீக்கம் அதிகரிக்குமோ என்ற கவலையும் எழுந்துள்ளது. இதனால் பங்கு சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் காணலாம். இதனை இன்னும் தூண்டும் விதமாக கொரோனா வைரஸ் தாக்கமும் அதிகரித்து வருகிறது.
இது தொடர்ந்து சர்வதேச சந்தைகளில் நிலவி வரும் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், இன்றும் சற்று சரிவில் காணப்படுகிறது.
சந்தை தொடக்கம்
இன்று காலை ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 11.96 புள்ளிகள் குறைந்து, 50,887.80 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 49.20 புள்ளிகள் அதிகரித்து 15,031.00 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து சந்தையின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 20.80 புள்ளிகள் அதிகரித்து 50,910.96 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 2 புள்ளிகள் அதிகரித்து 14,983.80 புள்ளிகளாகவும் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் 996 பங்குகள் ஏற்றத்திலும், 409 பங்குகள் சரிவிலும், 92 பங்குகள் மாற்றம் இல்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கு இடையில் நிஃப்டி சென்செக்ஸ் குறியீட்டில் சில குறியீடுகள் தவிர, பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹிண்டால் கோ, டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபள்யூ, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஓஎன்ஜிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஐடிசி, லார்சன், எம் & எம், கோல் இந்தியா, ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஹெச்டிஎஃப்சி வங்கி, ஓஎன்ஜிசி, கோடக் மகேந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், அல்ட்ராடெக்சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே லார்சன், எம் & எம், ஹெச்சிஎல் டெக், மருதி சுசூகி, ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம் என்ன?
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 414.78 புள்ளிகள் குறைந்து, 50,474.98 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 102 புள்ளிகள் குறைந்து, 14,879.75 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இதனையடுத்து ரூபாய் மதிப்பு நேற்று 72.65 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று ரூபாயின் மதிப்பு 72.58 ரூபாயாக தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications