பல்வேறு காரணங்களுக்கா அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து தொடர்ந்து முதலீட்டை வெளியேற்றி வந்த நிலையில் இன்று ஆசிய சந்தையின் நிலையான வர்த்தகத்தில் 0.88 சதவீதம் வரை உயர்ந்தது.
கடந்த ஒரு வார வர்த்தகத்தில் தொடர்ந்து சரிவை மட்டும் எதிர்கொண்ட மும்பை பங்குச்சந்தை இன்று இன்போசிஸ் மற்றும் வங்கி நிறுவனங்களின் மீதான நம்பிக்கை அதிகரித்த காரணத்தால் அதிகளவிலான முதலீட்டு இந்திய சந்சையில் குவிந்தது.

இன்று வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 276.16 புள்ளிகள் உயர்ந்து 31,568.01 புள்ளிகளை அடைந்தது அதேபோல் நிஃப்டி குறியீடு 86.95 புள்ளிகள் உயர்ந்து 9,852.50 புள்ளிகளை அடைந்து மீண்டும் 10,000 புள்ளிகளை நோக்கிப் பயணிக்கத் துவங்கியுள்ளது.
புதன்கிழமை வர்த்தக முடிவில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், சன் பார்மா, ஐடிசி, பவர் கிரின்ட், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications