சர்வதேச சந்தை வர்த்தகம் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சாதகமான வர்த்தகச் சூழ்நிலையின் காரணமாக இந்திய வர்த்தகச் சந்தையில் அதிகளவிலான முதலீட்டை ஈர்த்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை
இதன் காரணமாகப் புதன்கிழமை வர்த்தகத்தில் சரிந்த மும்பை பங்குச்சந்தை இன்று காலை முதல் உயர்வான வர்த்தகத்தைப் பதிவு செய்தது. இன்றைய வர்த்தகத்தில் பல ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் சரிவடையாமல் தொடர்ந்து உயர்வான நிலையில் இருந்தது.
ஐரோப்பிய சந்தை
நேற்றைய வர்த்தகத்தில் ஐரோப்பிய சந்தை முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டை வெளியேற்றிய நிலையில் இன்றும் அதேபோன்ற சூழ்நிலை தான் நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கச்சா எண்ணெய் வர்த்தகம் கணிசமாக உயர்ந்தால் ஐரோப்பிய முதலீட்டாளர் கணிசமான முதலீட்டை இந்திய சந்தையில் முதலீடு செய்தனர்.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 95.61 புள்ளிகள் உயர்ந்து 34,427.29 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 39.10 புள்ளிகள் உயர்ந்து 10,565.30 புள்ளிகளை அடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், யெஸ் பேங்க், பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் 2.5 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்தது.


Click it and Unblock the Notifications